இறைச்சி சமோசா|beef samosa cooking tips in tamil

தேவையான பொருட்கள்

இறைச்சி குழம்பு செய்ய:

மாட்டு இறைச்சி அரைக்கிலோ (கொத்து இறைச்சி/கீமா/கைமா)
உருளைக்கிழங்கு 4
பச்சை மிளகாய் 3 சிறிதாய் நறுக்கியது
பெரிய வெங்காயம் 2 சிறிதாய் நறுக்கியது
கறிமசாலா 1 தேக்கரண்டி
மல்லிப்பொடி 1 தேக்கரண்டி
மிளகாய் பொடி தேவையான அளவு
நச்சீரகம் பெருஞ்சீரகம் பொடி தலா 1 தேக்கரண்டி
ஏலக்காய் 2
கருவாப்பட்டை 2
பூண்டு 3 சிறிதாய் நறுக்கியது
கறிவேப்பிலை தேவையான அளவு
உப்பு தேவையான அளவு
சமையல் எண்ணெய் பொரிக்கவும் தாளிக்கவும்

சமோசா செய்ய:

மைதா மாவு 3 தேக்கரண்டி
சமோசா பட்டி(wrap) (கடைகளில் கிடைக்கும், கிடைக்காதவர்கள் தனியாக மைதா மாவு வைத்துக்கொள்ளவும்)

தயாரிக்கும் முறை

beef samosa seimurai,beef samosa cooking tips in tamil,beef sa

இறைச்சியை நன்றாக கழுலி, எலும்புகள் இல்லாமல் சதைகளை மட்டும் எடுத்து சுத்தப்படுத்தி சிறிது உப்பு மஞ்சள் இட்டு வைத்துக்கொள்ளவும்.

மூன்று தேக்கரண்டி மாவை தனியாக அளவாக நீர் விட்டு தேசை மாவு பக்குவத்திற்கு கலக்கி தனியாக வைத்திருக்கவும். (சமோசா உறையை நாமாக செய்தால் இது தேவையில்லை)

உருளை கிழங்கை கழுவிவிட்டு நன்றாக அவித்து தோலுரித்து, அதை மசித்து வைத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணைய் 3 மேசைக்கரண்டி விட்டு சூடானதும் ஏலக்காய் கருவாப்பட்டை போட்டு அது பொரிந்ததும்

இறைச்சியை போட்டு நன்றாக கிளற வேண்டும்.

அதோடு இஞ்சி பூண்டு அரைத்ததை போட்டு மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி விடவும்
இதனுடன் மசித்து வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து கிளறவும்.

அத்துடன் பச்சை மிளகாய், கறிமசாலா மல்லி பொடி மிளகாய் பொடி தேவையான அளவு போட்டு கிளறிவிடவும்.

கடைசியாக வெங்காயம் போட்டு நன்றாக வதங்கி நீர் வற்றியதும் இறக்கி தனியாக வைக்கவும்

சமோசா பட்டி வாங்கக்கிடைக்காதவர்கள், மைதாமாவில் சிறிது வெந்நீர், தேவையான உப்பு, சீரகம் போட்டு சப்பாத்தி மாவு போல நன்கு பிசையவும்.

பின்பு மாவை சிறு சிறு உருண்டையாக பிடித்து வைக்கவும்.

இவற்றை சப்பாத்தி போல உருட்டி எடுத்து அவற்றை கத்தி மூலம் இரு பாகமாக வெட்டி வைத்துக்கொள்ளலாம்.

சமோசா உறையில் தேவையான அளவு இறைச்சி கலவையை ஒரு மூலையில் வைத்து முக்கோணமாய் சுற்றவும்.

சுற்றி முடிந்ததும் கடைசியில் சமோசாவின் மூலைகளை குழைத்த மாவால் ஒட்டி தனியாக வைத்துக்கொள்ளவும். சமோசா பட்டியை நாமாக செய்திருந்தால் அதே மாவிலேயே ஒட்டிவிடலாம்.

பின்பு இவற்றை வாணலியில் எண்ணெய் விட்டு பொரித்து எடுக்கவும்.

சுவையான சமோசா தயார்.

Loading...
Categories: Non Vegetarian Recipes Tamil, Tamil Cooking Tips, அசைவம், சிற்றுண்டி

Leave a Reply


Sponsors