பீட்ரூட் ஜூஸ்| Beetroot juice in tamil

பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர அல்சர் குணமாகும்.

* பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும் பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.

* பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டுவர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.

* கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக்.

* பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமானத்தைக் கூட்டும்.

 

Beetroot juice maruthuva kurippugal in tamil,Beetroot juice tami

* தலையில் ஏற்படும் வெள்ளை நிற பொடுகுகளைக் களைய பீட்ரூட் ஜூஸை பொடுகு இருக்கும் இடங்களில் மசாஜ் செய்து இரண்டு மணிநேரம் கழித்து சீயக்காய் பவுடர் கொண்டு தலை குளித்தால் நாளடைவில் பொடுகுகள் சரியாகும்.

* புற்றுநோயினால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் நோயாளிகள், ஊட்டி பீட்ரூட் ஜூஸ் தினமும் 1 டம்ளர் பருகி வந்தால் புற்றுநோய் பரவுவது தடுக்கப்படும். ஆரம்ப நிலையிலுள்ள புற்றுநோயை குணமாக்கும் வல்லமை படைத்தது பீட்ரூட்.

* பீட்ரூட் கீரையையும் மற்ற கீரைகள் போல் சமையல் செய்து சாப்பிட அல்சர், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் சரியாகும்.

* புதியதாக இரத்த அணுக்கள் உருவாக துணை புரிகிறது. பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள், பேரீச்சம் பழம், அத்திப்பழம் ஆகியவற்றை அதிக அளவு உண்டும், இரத்தத்தின் அளவு அதிகரிக்காமல் இருக்கும் பட்சத்தில் பீட்ரூட்டை வாரத்திற்கு நான்கு நாட்கள் உண்டால் நல்ல பலன் கிடைக்கும். சமையல் செய்து சாப்பிடுவதுடன் பச்சையாகவும் சாப்பிடலாம்.

பீட்ரூட் ஒரு சர்வ நிவாரணி!

 

பீட்ரூட் காய், கீரை, ஜூஸ் என பீட்ரூடின் அனைத்து பாகங்களும் உடலுக்கு நன்மை பயக்கக் கூடியவை. பீட்ரூட் என்ற ஒற்றை உணவுப்பொருள் உடலின் பல்வேறு சிக்கல்களைத் தீர்க்க வல்லது ஆகும்.

பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர அல்சர் குணமாகும்.

பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும் பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.

பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டுவர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.

கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக்.

பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமானத்தைக் கூட்டும்.

தலையில் ஏற்படும் வெள்ளை நிற பொடுகுகளைக் களைய பீட்ரூட் ஜூஸை பொடுகு இருக்கும் இடங்களில் மசாஜ் செய்து இரண்டு மணிநேரம் கழித்து சீயக்காய் பவுடர் கொண்டு தலை குளித்தால் நாளடைவில் பொடுகுகள் சரியாகும்.

புற்றுநோயினால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் நோயாளிகள், ஊட்டி பீட்ரூட் ஜூஸ் தினமும் 1 டம்ளர் பருகி வந்தால் புற்றுநோய் பரவுவது தடுக்கப்படும். ஆரம்ப நிலையிலுள்ள புற்றுநோயை குணமாக்கும் வல்லமை படைத்தது பீட்ரூட்.

பீட்ரூட் கீரையையும் மற்ற கீரைகள் போல் சமையல் செய்து சாப்பிட அல்சர், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் சரியாகும்.

புதியதாக இரத்த அணுக்கள் உருவாக துணை புரிகிறது. பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள், பேரீச்சம் பழம், அத்திப்பழம் ஆகியவற்றை அதிக அளவு உண்டும், இரத்தத்தின் அளவு அதிகரிக்காமல் இருக்கும் பட்சத்தில் பீட்ரூட்டை வாரத்திற்கு நான்கு நாட்கள் உண்டால் நல்ல பலன் கிடைக்கும். சமையல் செய்து சாப்பிடுவதுடன் பச்சையாகவும் சாப்பிடலாம்.

பாலியல் பிரச்சினைக்கு தீர்வு தரும் பீட்ரூட்

சொன்னால் நம்பமாட்டீர்கள், ஆண்கள் பீட்ரூட் சாப்பிட்டால், பாலியல் வாழ்க்கை மேம்படுமாம். சமீப காலமாக ஆண்கள் அதிக அளவில் பாலியல் பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.

எனவே இதற்கு ஓர் இயற்கை வழியைக் கண்டுபிடிக்கும் வகையில், ஆராய்ச்சியாளர்கள் காய்கறிகளில் ஒன்றான பீட்ரூட்டை சோதித்தனர். அதில் பீட்ரூட்டை ஆண்கள் சாப்பிடுவதால், பாலியல் பிரச்சனைகளுக்கு எடுத்துக் கொள்ளும் மருந்துகளுக்கு இணையாக பீட்ரூட் செயல்படுவது தெரிய வந்துள்ளது.

இதற்கு முக்கிய காரணம் பீட்ரூட்டில் நைட்ரேட்டுகள் அதிகம் உள்ளது. எனவே பாலுணர்ச்சி குறைவாக இருந்தாலோ அல்லது விறைப்புத்தன்மை பிரச்சனை ஏற்பட்டாலோ, அதனை சரிசெய்ய பீட்ரூட்டை சாப்பிடுவது நல்ல பலனைத் தரும். சரி, இப்போது பீட்ரூட் எப்படி ஆண்களின் பாலியல் பிரச்சனைகளை சரிசெய்கிறது என்று பார்ப்போம்.

பீட்ரூட் எப்படி உதவுகிறது?
பீட்ரூட்டை சாப்பிடும் போது, அதில் உள்ள நைட்ரேட்டுகள் வாயில் உள்ள பாக்டீரியாக்களால் நைட்ரைட்டுகளாக மாற்றமடைகிறது. பீட்ரூட்டை நன்கு மென்று விழுங்கும் போது, வயிற்றில் உள்ள பாக்டீரியாக்களால் அது நைட்ரிக் ஆக்ஸைடாக மாறி, இரத்த நாளங்களை விரியச் செய்து, உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.

பிறப்புறுப்புகளுக்கு இரத்த ஓட்டம்
ஆண்கள் தொடர்ந்து பீட்ரூட் சாப்பிட்டு வருவதன் மூலம், உடல் முழுவதும், குறிப்பாக பிறப்புறுப்புகளில் உள்ள இரத்த நாளங்கள் விரிந்து, இரத்த ஓட்டம் அதிகரித்து, பாலியல் பிரச்சனைகள் நீங்கி, படுக்கையில் நீண்ட நேரம் சிறப்பாக செயல்பட உதவும்.

இரத்த அழுத்தம் குறையும்
பிரிட்டிஷ் இதய பவுண்டேஷனின் படி, நைட்ரேட்டுகள் அதிகம் உள்ள காய்கறிகளை உட்கொண்டு வந்தால், இரத்த அழுத்தம் குறையும் என்கின்றனர். மேலும் இதை ராணி மேரி பல்கலைகழகமும் 2010 ஆம் ஆண்டு சோதித்து மீண்டும் நிரூபித்துள்ளது.

500 கிராம் பீட்ரூட்
அதுமட்டுமின்றி ஒருவர் தினமும் 500 கிராம் பீட்ரூட் சாப்பிட்டால், ஆறு மணிநேரத்திற்குள் இரத்த அழுத்தம் குறைந்திருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்தால், பாலியல் வாழ்க்கை பாதிக்கப்படும். ஆனால் இப்பிரச்சனையை பீட்ரூட் குறைப்பதால், ஆண்கள் தினமும் பீட்ரூட் சாப்பிடுவது உயர் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதோடு, பாலியல் வாழ்க்கையிலும் சிறப்பாக செயல்பட முடியும்.

பச்சையாக
பீட்ரூட்டை நன்கு சுத்தமாக நீரில் கழுவி, தோல் நீக்கிவிட்டு, துண்டுகளாக்கி, சாலட்டுகளில் சேர்த்து சாப்பிட்டு வரலாம்.

வேக வைத்தது
உங்களுக்கு பச்சையாக பீட்ரூட்டை சாப்பிட பிடிக்காவிட்டால், அதனை துண்டுகளாக்கி, வேக வைத்து, பின் அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாறு பிழிந்து உட்கொண்டு வர, உடலில் நைட்ரேட்டுகளின் அளவு அதிகரிப்பதோடு, இரத்தணுக்களின் அளவும் அதிகரிக்கும்.

ஜூஸ்
பீட்ரூட் இயற்கையாகவே இனிப்பாக இருப்பதால், இதனை ஜூஸ் செய்து குடிக்கும் போது, அதில் சர்க்கரை சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. பீட்-ருட் ஜூஸ் செய்வதற்கு 2 சிறிய பீட்ரூட்டை எடுத்து, நன்கு கழுவி, தோல் நீக்கிவிட்டு, துண்டுகளாக்கி, மிக்ஸியில் போட்டு அரைத்து, வடிகட்டி அப்படியே குடிக்க வேண்டும்.

 

கொழுப்பைக் குறைக்கும் பீட்ரூட்

பீட்ரூட்டின் சிவப்பு நிறம், அதில் நிரம்பியுள்ள சத்துகளின் அடையாளம். மண்ணுக்கு அடியில் விளையும் இந்தக் காய் தரும் பலன்கள் என்ன? பார்ப்போம்:

l பீட்ரூட் சிவப்பாக இருப்பதற்கும், அது கையில் ஒட்டிக்கொண்டால் போகாமல் இருப்பதற்கும் காரணம் பீட்டா சயனின் என்ற வேதிப்பொருள், இது மிக நல்ல ஆன்ட்டி ஆக்சிடண்ட்.

l பீட்ரூட்டில் நைட்ரேட் சத்து அதிகம். எனவே, தொடர்ச்சியாகப் பீட்ரூட் சாப்பிட்டுவந்தால் மூளைத்தாக்கு (ஸ்டிரோக்), ரத்த அழுத்தத்தைத் தள்ளி வைக்கலாம்.

l மூளைக்கு ரத்தம் செல்வதைப் பீட்ரூட் மேம்படுத்துகிறது. அதனால், மூப்புமறதி (டிமென்ஷியா) பாதிப்பு குறையும்.

l அதேபோல பீட்ரூட்டைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் உடலில் கெட்ட கொழுப்பு சேரும் விகிதத்தைக் குறைக்கலாம்.

l எந்த ஒரு உடல் உழைப்பு சார்ந்த செயல்பாட்டைச் செய்வதற்கு முன்னதாகவும் ஒரு குவளை பீட்ரூட் ஜூஸைக் குடித்தால், உற்சாகமாக வேலை செய்வதற்கான சக்தியை அது கொடுத்துவிடும்.

நறுக்கினால் ‘பளிச்’சென்று ரத்தச் சிவப்பில் ஈர்க்கும் ‘பீட்ரூட்’டில் ஏராளமான சத்துகள் நிறைந்துள்ளன.

இதில் உள்ள கார்போஹைட்ரேட், சர்க்கரைத் துகள்களாக இருப்பதால் விரைவில் ஜீரணமாகி நம் ரத்தத்துடன் கலந்துவிடுகிறது.

பீட்ரூட்டில் தண்ணீர் 87.7 சதவீதம், புரதம் 17, கொழுப்பு 0.1, தாதுக்கள் 0.8, நார்ச்சத்து 0.9, கார்போஹைட்ரேட் 0.8 சதவீதமும், கால்சியம் 18 மில்லி கிராம், பாஸ்பரஸ் 5.5, இரும்புச்சத்து 10, வைட்டமின் ‘சி’ 10 மில்லி கிராமும் உள்ளன.

பீட்ரூட்டில் உள்ள மாவுச்சத்து கண்ணுக்கும், உடலுக்கும் குளிர்ச்சி தரும். மேலும் ரத்தத்தில் கழிவுகளை அகற்றிச் சுத்தம் செய்யும்.

அதோடு, வைட்டமின் ஏ மற்றும் பி1, பி2, பி6 நியாசின், வைட்டமின் பி ஆகியவற்றுடன் சோடியம், பொட்டாசியம், கந்தகம், குளோரின், அயோடின், தாமிரச் சத்துக்களும் பீட்ரூட்டில் உள்ளன.

பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் அல்சர் எனப்படும் குடற்புண் குணமாகும்.

பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும், பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.

தீப்பட்ட இடத்தில் பீட்ரூட் சாறைத் தடவினால் தீப்புண் வீக்கமாக மாறாமல் விரைவில் குணமடையும்.

பீட்ரூட் கஷாயம் மூலநோயைக் குணப்படுத்தும்.

பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமானத்துக்கு வழிவகுக்கும்.

பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சைச் சாறில் தோய்த்து உண்டுவர, ரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தி அதிகரிக்கும்.

பீட்ரூட்டை வேகவைத்த நீருடன் வினிகரை போட்டு, அதை ஆறாத புண்கள் மீது தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.

கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த மருந்தாகும்.

பீட்ரூட்டை மற்ற கீரைகள் போல் சமையல் செய்து சாப்பிட்டால் மஞ்சள் காமாலை குணமடையும்.

பீட்ரூட் ரத்தசோகையைக் குணப்படுத்தும், மலச்சிக்கலைப் போக்கும், பித்தத்தைக் குறைக்கும், அரிப்பு மற்றும் எரிச்சலைத் தவிர்க்கும்.

சிறுநீரகத்தில் சேர்ந்துள்ள நச்சுப் பொருட்களை பீட்ரூட் போக்கிவிடும்.

இத்தனை சத்துக்கள் நிறைந்த பீட்ரூட்டை குழந்தைகளும் விரும்பிச் சாப்பிட வைக்க ஒரு வழியுண்டு. அது, பீட்ரூட்டைத் துருவி, கடலைப்பருப்பு மாவைக் கலந்து வடையாகச் சுடுவதுதான். இந்த கரகர, மொறுமொறு வடை, குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களையும் ஈர்க்கும்!

Loading...
Categories: arokiya unavu in tamil, Maruthuva Kurippugal in Tamil, Tamil Cooking Tips, சிற்றுண்டி, சைவம்

Leave a Reply


Sponsors