உடல் எடையை இயற்கையாகக் குறைக்க குறிப்புகள் | edai kuraiyaiya iyarkai maruthuvam in tamil language

“நான் எடை கூடி விட்டேன் என்று நினைக்கிறேன், இளைக்க வேண்டும்” – என்பதை எவ்வளவு அடிக்கடி நீங்கள் கேள்விப் படுகின்றீர்கள்?

எப்படியாவது சில அதிகப் பவுண்ட் எடையினை குறைக்க வேண்டும் என்னும் தீவிரமான விவாதங்களுக்கு இட்டுச் செல்லும்.

நீண்ட நேரம், ஜிம்மில் உடற்பயிற்சி செய்வது ,ஆரோக்கிய உணவினை மட்டுமே உண்ண உங்கள் நாக்குச் சுவையினைக் கட்டுப் படுத்துவது, போன்றவற்றை ஏற்கனவே நீங்கள் முயற்சி செய்திருக்கலாம். இப்போது இவற்றுடன் இயற்கை யான பக்க விளைவற்ற எளிய 15-20 நிமிடங்களே எடுத்துக் கொள்ளக் கூடிய சிலவற்றைச் சேர்த்துக் கொள்ளலாமா?

தியானம் ; ஒரு எளிய ஆனால் சக்தி வாய்ந்த நுட்பமாகும். எவ்வாறு மனதுடன் சம்பந்தப் பட்ட ஒன்று உடல் எடையைக் குறைக்கும் என்று ஆச்சர்யப் படுகின்றீர்களா?எவ்வாறு தியானம் உடல் எடையைக் குறைக்கும் என்று பார்ப் போம்.

#1 முயற்சியின்றி உடல் நிறை குறியீட்டு எண்ணைக் குறையுங்கள்

எடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தால், உங்களுடைய அடித்தள வளர்சிதைமாற்றவிகிதத்திற்கு(BMS) ஒழுங்காக கணக்கு வைத்துக் கொண்டிருப் பீர்கள். இதன் மூலம் நீங்கள் எடுத்துக் கொள்ளும் கலோரிகளைக் குறைப்பீர்கள். இவ்வாறு கலோரிகளைக் குறைப்பதன் விளைவு உடல் எடையைக் குறைப்பது ஆகும்.

#2 உடற்பயிற்சித் திட்டத்தை மாற்றுவது

edai kuraiyaiya easy tips in tamil,edai kuraiyaiya maruthuvam,edai kuraiyaiya seiyavendeyavai,edai kuraiyaiya Tips in Tamil font,edai kuraiyaiya nattu maruthuvam

சில நாட்களுக்கு உடற்பயிற்சியை நிறுத்தி விட்டால், உடனேயே எடல் எடை கூடுவதைக் கவனித்திருக்கிறீர்களா? ஏனெனில் நீங்கள் உண்ணும் உணவுச் சத்து செலவழிக்கப் படுவதில்லை. ஜிம்மில் செய்யும் உடற் பயிற்சி பசியைத் தூண்டுகிறது. ஆனால் அது சத்து உறிஞ்சப் படுவதைத் தடுப்பதில்லை. யோகா மற்றும் தியானத்தின் மூலம் உறிஞ்சல் அதிகப் பட்டு, கலோரிகள் அதிகம் உள்ள உணவுப் பொருட்களின் மீது நாட்டம் குறைகின்றது. பசி எடுக்கிறது, ஆனால் குறைந்த அளவு உணவிலேயே திருப்தி ஏற்படுகிறது. இது நீண்ட காலபயனைத் தருகிறது. சில நாட்கள் உடற்பயிற்சி செய்யாவிட்டாலும் உங்கள் எடை கூடாது.

#3 உங்கள் நடுநிலையை மீட்டுத் தருகிறது

அதிகமான எடை கூடுவது அல்லது எடை குறைவது என்பது சில சமயங்களில் ஹார்மோன்களின் சம சீர் குலைவினால் ஏற்படலாம். தியானம் அத்தகைய சீர்குலையும் நிலையினை சம நிலைப் படுத்த உதவும். அதாவது அதிக எடையைக் குறைக்கவும், குறைந்த எடை யைக் கூட்டவும் உதவும்.

#4 Reduce The Number of Go-to’s

எல்லாவிதமான உணவுகளின் மீதும் ஏற்படும் ஆசை எடைக் குறைப்பிற்குப் பெரும் தடை ஆகும். ஒரு பேக்கரியைக் கடக்கும் போது வாசனை மிகுந்த ஒரு டோ நட் வாங்க வேண்டும் என்னும் விருப்பத்தை தடுப்பது எவ்வாறு? சீரான தியானத்தின் மூலம் அது மிக எளிதாகும்.

எல்லாவிதமான உணவுகளின் மீதும் ஏற்படும் ஆசை எடைக் குறைப்பிற்குப் பெரும் தடை ஆகும். ஒரு பேக்கரியைக் கடக்கும் போது வாசனை மிகுந்த ஒரு டோ நட் வாங்க வேண்டும் என்னும் விருப்பத்தை தடுப்பது எவ்வாறு? சீரான தியானத்தின் மூலம் அது மிக எளிதாகும்.

“ஓராண்டுக்கு முன்னர் வரையில் நிறைய சாக்கலட்டுகள் குறைந்த பட்சம் ஒரு நாளில் ஒரு தடவையாவது எடுத்துக் கொண்டிருந்தேன். அமைதியற்ற நிலையிலேயே எப்போதும் இருந்து வந்தேன். என்னுடைய எடை கூடிக் கொண்டே இருந்தது. எவ்வாறு இதை நிறுத்துவது என்றும் தெரியவில்லை. இரண்டு மாதங்கள் ஒழுங்கான தியானப் பயிற்சியினால் என்னுடைய ஆசைகள் அடங்குவதைக் கண்டேன். சாக்கலட்டுகள் உண்ணும் விருப்பத்தைத் தடுப்பது எளிதாக இருந்தது. இன்னும் தியானம் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறேன். என் எடை 7 கிலோ குறைந்து விட்டது” என்கிறார் திவ்யா சச்தேவ்.

# 5 உங்கள் அர்ப்பணிப்பை அதிகப் படுத்துங்கள்

எடைக் குறைப்புத் திட்டத்தை அச்சுறுத்தல்களுக்கு இரையாக்குவது எவ்வளவு எளிதானது என்பதை அறிந்தீர்களா? தூக்கம், சத்தில்லா உணவு, இனிப்புகள், இவையனைத்தும் எடைக் குறைப்புத் திட்டத்தினை எளிதில் தகர்த்துவிடும். உங்கள் முயற்சியின் அர்ப்பணிப்பு நிலைக்கு தியானம் உதவும். தினமும் தியானம் செய்தால் உங்கள் எடையைக் குறைக்கும் எண்ணம் வலுவாகி, உடற்பயிற்சி , மிதமான உணவு , மற்றும்ஆரோக்கிய பழக்கங்கள் ஆகியவற்றுக்கு உங்கள் அர்ப்பணிப்பு அதிகமாகும்.

நோக்கத்தினை அறிந்துணரும் வலு தியானத்தினால் ஏற்படும்.

தியானம் எனக்கு உள் வலிமையினை அளித்து, தினமும் பயிற்சி செய்யும் அர்ப்பணிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கின்றது.” என்று கூறுகிறார் மாயன்க் தாக்கர்

#6 அழுத்தத்தைக் குறையுங்கள், காய்கறிகளை உண்ணுங்கள்

அடுத்த முறை நீங்கள் சாக்கலட் அல்லது பிற சத்தற்ற குப்பை உணவுகளை அணுகும்போது, ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என்று யோசியுங்கள். மன அழுத்தம் எப்போதும் எதையாவது கொறித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்னும் இந்த போக்கிற்கு நேரிடையான தொடர்பு உள்ள ஒன்று. இது தாற்காலிகமாக அழுத்தத்திலிருந்து விடுதலை அளிக்கக் கூடும். ஆயினும் தியானம் செய்தால், சேர்ந்திருக்கும் அனைத்து அழுத்தங்களுக்கும் இயற்கையாக நீங்கள் விடை கொடுக்கலாம்.அது இன்னும் கூடுதலான ஆரோக்கிய வழியாகும்.

“முன்பெல்லாம், என்னுடைய காதலருடன் எனக்கு கடினமான உறவு இருந்து எப்போதும் எனக்கு மன அழுத்தம் இருந்ததுண்டு. உணவே என்னுடைய அழுத்தத்தைத் தீர்க்கும் விடையாக இருந்தது. அவருடன் ஒவ்வொரு தடவை சண்டையிடும்போதும், நான் அதிகமாக உண்பதுண்டு. பிறகு,சுதர்சனக்ரியாவும் தியானமும் என்னுடைய எடைக் குறைப்புத் திட்டத்தில் ஓர் அங்கமாயின. என்னை அவை அமைதிப் படுத்தின. இன்று நான் அதிகமாக உண்பதில்லை, நிச்சயம் என் உடை குறைய அவை காரணமாயின.” என்று கூறுகின்றார், கோமல் கெளர்.

#7 உங்கள் கடிகாரத்தில் சில மணி நேரத்தை அதிகப் படுத்துங்கள்

இப்போது எடைக்குறைப்புக்காக நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் குறைந்து விட்டன.தியானம் உங்களுக்கு ஒரு நாளில் அதிக நேரத்தினைக் கூட்டும் ! தியானம் செய்ய உங்களுக்கு 15 முதல் 20 நிமிஷங்களே தேவை. அதை ஒரு நாளில் எளிதாக உங்கள் வசதிக்கேற்ப அடையலாம். அந்த 20 நிமிஷ தியானத்தால், உங்கள் செயல் திறன் கூடும். உங்கள் அனைத்துப் பணிகளையும் குறைந்த நேரத்தில் முடித்து விடலாம். உங்கள் எடைக் குறைப்புத் திட்டத்திற்கு அதிக நேரம் காண முடியும்.

#8 உங்களுக்கு நீங்களே விருப்பமானவராக ஆகுங்கள் !

இது விசித்திரமாக இருக்கிறதா? நீங்கள் ஏற்கனவே உங்களைக் குண்டு என்று ஏற்றுக் கொண்ட பின்னர் ஏன் எடையைக் குறைக்க வேண்டும் என்று அதிசயிக்கின்றீர்களா? ஏனெனில், உங்கள் உடலமைப்பினை நீங்கள் ஏற்றுக் கொண்ட பின்னர் நீங்கள் உள்ளே அமைதியுடன் எதைப் பற்றியும் கவலைப் படுவதை நிறுத்தி விடுகிறீர்கள். அத்தகைய மனநிலையில் எடை குறைய எடுக்கும் முயற்சிகள் எளிதாகவும், மிக்க பயனுள்ளதாகவும் இருக்கும். இதை ஒரு முறை முயன்று பாருங்கள். இளைப்பாறுங்கள்! உங்கள் உடலை நேசியுங்கள் ! உங்கள் வாழ்வில் ஏற்படும் மாற்றத்தினை காணுங்கள்.

முக்கியக் குறிப்பு: ஒவ்வொருவரின் உடல் விதமும் வெவ்வேறானது. ஆகவே யோகா மற்றும் தியானத்தின் பயன்கள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறாக இருக்கலாம்.உங்களுடைய அனுபவம் பிறரின் அனுபவத்திலிருந்து வேறு பட்டதாக இருக்கலாம். ஆகையால் ஒப்பிட வேண்டாம். நம்பிக்கை மற்றும் பொறுமையை இழக்க வேண்டாம். தியானம் உடனே ஒட்டிக் கொள்ளாது, பலன்கள் தெரிய தினமும் பயிற்சி செய்ய வேண்டியது மிக அவசியம்.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் ஞான உரைகளின் தூண்டுதலால்

பிரித்திகா நாயரால் தொகுக்கப் பட்டது.

பாரதி ஹரீஷ், பிரியதர்சினி ஹரிராம் ஆகிய இரு சஹஜ் சமாதி ஆசிரியர்களின் குறிப்புக்களை உள்ளடக்கியது.

Loading...
Categories: Weight Loss Tips in Tamil

Leave a Reply


Sponsors