சுவையான சத்தான ராகி கருப்பட்டி பணியாரம்|karupatti paniyaram recipe in tamil

தேவையான பொருட்கள் :

ராகி மாவு – 1 கப்

கருப்பட்டி – கால் கப்

துருவியத் தேங்காய் – 1/4 கப்

ஆப்பசோடா, உப்பு – 1/4 தேக்கரண்டி

ஏலக்காய்ப் பொடி – சிறிது

நல்லெண்ணெய் – தேவைக்கேற்ப

karupatti paniyaram seimurai,karupatti paniyaram cooking tips in tamil,karupatti paniyaram samayal kurippu,karupatti

செய்முறை :

* கருப்பட்டியை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கரைத்து வடிகட்டி கொள்ளவும்.

* முதலில் ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, வடிகட்டிய கருப்பட்டி தண்ணீர், ஆப்பசோடா, உப்பு, ஏலக்காய்ப் பொடி ஆகியவற்றை சேர்த்துக் கலந்து கொள்ள வேண்டும்.

* பின்னர் அதில் தேங்காய்த் துருவல் சேர்த்து, கட்டி சேராதவாறு நன்கு கலந்து, 1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

* பணியார கல்லை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு பணியாரங்களாக சுட்டு எடுக்க வேண்டும்.

* சுவையான சத்தான ராகி கருப்பட்டி பணியாரம் ரெடி.

Loading...
Categories: Tamil Cooking Tips, சிற்றுண்டி, சைவம்

Leave a Reply


Sponsors