கேழ்வரகுஅடை|kelvaragu adai samayal kurippu

தேவையான பொருட்கள் :
1 கப் கேழ்வரகு மாவு
1 Tbsp ஓட்ஸ்
1 Tsp எண்ணெய்
1/2 Tsp எள்ளு
1/2 Tsp சீரகம்
1/4 Tsp ஓமம் ( விருப்பப்பட்டால் )
1/4 Tsp பெருங்காய பொடி ( விருப்பப்பட்டால் )
1 பெரிய வெங்காயம் ( பொடியாக நறுக்கவும் )
2 அ 3 பச்சை மிளகாய் ( பொடியாக நறுக்கவும் )

1 Tbsp காரட் துருவியது
1/2 Tsp உப்பு ( அட்ஜஸ்ட் )
15 கருவேப்பிலை ( பொடியாக நறுக்கவும் )
4Tsp கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கியது

தேவையான அளவு எண்ணெய் அடை சுடுவதற்கு.

செய்முறை :
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் மேலே கொடுக்கப்பட்டுள்ள எல்லா பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.
கையினால் ஒன்றாக சேர்த்து பிசறி விடவும்.

kelvaragu adai seimurai,kelvaragu adai cooking tis in tamil,kelvaragu adai samayal kurippu,kelvaragu adai seivathu eppadi,kelv

பிறகு மிக மிக மிதமான சுடு தண்ணீரை ஊற்றி மாவை பிசைந்து கொள்ளவும்.
சிறிது கெட்டியான பதத்தில் இருக்க வேண்டும்.
மாவு தயார்.

இனி தோசை கல்லில் அடை எப்படி சுடுவது என பார்ப்போம்.
ஒரு சுத்தமான வாழை இல்லை அல்லது பிளாஸ்டிக் தாள் எடுத்துக்கொள்ளவும். நான் தாள் எடுத்துக் கொண்டேன்.
அடுப்பில் தோசை கல்லை சூடாக்கவும்.
தாளின் மேல் எண்ணெய் தடவவும்.
ஒரு உருண்டை மாவை தாளின் மேல் வைக்கவும்.
கை விரல்களிலும் எண்ணெய் தடவிக் கொண்டு அடை தட்டவும்.

ஒரே மாதிரி தடிமனாக தட்ட வேண்டும்.
சூடான கல்லில் எண்ணெய் விட்டு தட்டி வைத்த அடையை கவனமாக எடுத்து போடவும்.
அடையின் மேல் 1/2 Tsp எண்ணெய் பரவலாக ஊற்றவும்.

கேழ்வரகு அடை [ ராகி அடை ]

திருப்பிப் போட்டு நன்றாக வெந்தவுடன் தட்டில் எடுத்து வைக்கவும்.
இதே போல ஒவ்வொன்றாக தட்டி சுட்டு எடுத்து அடுக்கவும்.

இதில் காரம் சேர்த்திருப்பதால் ஏதும் தொட்டுக் கொள்ள தேவையே இல்லை.

தேவையானால் தக்காளி சாஸ் அல்லது தேங்காய் சட்னி தொட்டுக் கொண்டு சுவைக்கலாம்.

முயற்சி செய்து பார்க்க மேலும் சில சமையல் குறிப்புகள்

Loading...
Categories: arokiya unavu in tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சிற்றுண்டி, சைவம்

Leave a Reply


Sponsors