மசால் வாழைக்காய்|masala valakkai Saiva samyal kurippugal

தேவையான பொருட்கள்:

வாழைக்காய் – 1
சின்ன வெங்காயம் – 6
வரமிளகாய்- சீரகப்பொடி – 2 டீ ஸ்பூன்
கடுகு – ½ டீ ஸ்பூன்
உளுந்து – ½ டீ ஸ்பூன்
கறிவேப்பிலை – 1 ஆர்க்கு
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

வாழைக்காயின் தோலை சீவி நீக்கிவிடவும். சிறிய சதுர துண்டுகளாக வாழைக்காயை நறுக்கிகொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிகொள்ளவும். வானலியில்  எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். சூடான எண்ணையில் கடுகு, உளுந்து சேர்க்கவும். கடுகு பொரிந்த பின் கறிவேப்பிலை சேர்த்து பொரிக்கவும். இதனுடன் சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் வாழைக்காயைச் சேர்த்து இரண்டு, மூன்று நிமிடங்கள் வதக்கவும். இதனுடன் வரமிளகாய் – சீரகப்பொடி சேர்த்து மசால் நன்கு பரவும்படி கிளறிவிடவும். இடை இடையே சிறிது தண்ணீர் தெளித்து மூடி வைத்து வாழைக்காயை முழுமையாக வேகும்படி செய்யவும். அடிபிடிக்காமல் இருக்க சிறிது நேரத்திற்கு ஒருமுறை கிளறிவிட்டுக்கொண்டே இருக்கவும். கடைசியாக தேயையான அளவு உப்பை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.

masala valakkai seimurai,masala valakkai cooking tips in tamil,masala valakkai samayal kurippu,masala valakkai seivathu

 

குறிப்பு:

நறுக்கி வைத்திருக்கும் வாழைக்காய் சில நேரம் சமைப்பதற்கு முன்பே நிறம் கறுத்துவிடும். உப்பு போட்ட தண்ணீரில் வாழைக்காயை போட்டு வைக்க நிறம் மாறாது.

Loading...
Categories: Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors