மாதவிடாய் தவறிவிட்டதா|mathavidai thavari vara karanam

ஒருவருக்கு மாதவிடாய் ஏற்படும் தினத்திலிருந்து 5 அல்லது அதற்கு மேற்பட்ட

தினங்களுக்கு ஏற்படவில்லை எனில் தாமதமான மாதவிடாய் என்றும், 6 வாரங்களுக்கு

நீடித்தால் மாதவிடாய் தவறியது என்றும் பொருள்.

இதற்கான காரணங்கள்:

* கருத்தரித்திருந்தால் மாதவிடாய்த் தவறும். மருத்துவரை அணுகி கர்ப்பம்

தரித்திருக்கிறீர்களா என்பதை உறுதி செய்து கொண்டு மாதவிடாய் தவறியதற்கான மற்ற

 

mathavidai thavari vara karanam

காரணங்களை பரிந்துரை செய்யலாம்.

* மாதவிடாய் ஏற்படத் துவங்கிய முதல் 2 ஆண்டுகளுக்கு, உடலின் ஹார்மோன்கள்

மாதவிடாய் மாறுதல்களுக்கு தன்னை தயார்படுத்திக் கொள்ளாத நிலையில் இருக்கும்,

இதனால் சூலகத்திலிருந்து மாதமொருமுறை கரு முட்டையை வெளியேற்ற தாமதமாகும்.

* மனக்கவலையோ, அழுத்தமோ இருந்தால் மாதவிடாய் தாமதமாவதற்கும்

தவறுவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது.

* அல்லது கடுமையான காய்ச்சல், பாலியல் உறவால் ஏற்பட்ட கிருமியின் தாக்குதல்,

கடுமையான உடல் எடையிழப்பு அல்லது எடை கூடுதல், கடுமையான உடற்பயிற்சி

இவைகளாலும், விரதம் போன்றவற்றாலும் கூட மாதவிடாய் சுழற்சி பாதிப்படையும்.

* இது அரிதாகவே ஏற்படும் ஒரு காரணமாகும். சில சமயங்களில் கருத்தடை

மாத்திரைகளை நிறுத்தியிருந்தீர்களானால் தற்காலிகமாக ஹார்மோன்கள் சமநிலை

குலையும்.

இதனால் மாதவிடாய் தவறும். தைராய்டு சுரப்பி, கபச் சுரப்பு, அட்ரினல் சுரப்பிகள் மற்றும்

கருசூலகம் ஆகிய பிரச்சினைகளால் அரிதாக மாதவிடாய் பிரச்சினைகள் ஏற்படலாம்.

Loading...
Categories: Maruthuva Kurippugal in Tamil, Pregnancy Tips Tamil

Leave a Reply


Sponsors