உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் நந்தியா வட்டை|nanthiyavattai maruthuvam

நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் இளையவர் முதல் முதியவர் வரை அனைவருக்கும் துன்பம் தரக் கூடியது உயர் ரத்த அழுத்தம். இன்றைய நவீன வாழ்க்கை முறை காரணமாக பலருக்கும் உயர் ரத்த அழுத்தம் உருவாகி விடுகிறது. உடலில் ரத்த அழுத்தம் அதிகமாகிற போது பல நோய்களுக்கு அதுவே காரணமாகி விடுகிறது. இதனால் சிறுநீரக பழுது ஏற்படுகிறது. கண் இமைகள் வீக்கம் அடைகின்றன. விழித்திரை பாதிப்பு ஏற்படுகிறது.

ரத்த அழுத்தத்தை குறைப்பதற்கு நமது உணவு முறையே மருந்தாகி பயன் அளிக்கிறது. நந்தியாவட்டை செடியானது உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பதற்கு மிக சிறந்த மருந்தாக அமைகிறது. நந்தியா வட்டை இலையை பயன்படுத்தி உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பதற்கான மருந்தை தயார் செய்யலாம். இதற்கு தேவையான பொருட்கள் நந்தியாவட்டை இலை, மிளகு பொடி, சீரக பொடி. நந்தியா வட்டையின் 10 இலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

nanthiyavattai maruthuva kurippugal in tamil,nanthiyavattai tamil maruthuvam,nanthiyavattai mooligai maruthuvam,nanthiy

அரை டீஸ்பூன் சீரக பொடி சேர்க்க வேண்டும். சிறிதளவு மிளகு பொடி சேர்க்க வேண்டும். ஒரு டம்ளர் அளவுக்கு தேவையான நீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இதை தொடர்ந்து பருகி வருவதால் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது. அதே போல் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தக் கூடிய மருந்தை தயார் செய்யலாம்.

இதற்கு தேவையான பொருட்கள் ஏலக்காய், அரிசி திப்பிலி, சுக்கு, அதிமதுரம், சீரகம், பனங்கற்கண்டு. பனங்கற்கண்டு தவிர மற்ற அனைத்தையும் சம அளவு எடுத்து அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பொடியை அரை ஸ்பூன் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் சிறிதளவு பனங்கற்கண்டு சேர்க்க வேண்டும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் பனங்கற்கண்டு சேர்க்காமல் இதை தயார் செய்து கொள்ளலாம்.

ஒரு டம்ளர் அளவுக்கு தேவையான நீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை நன்றாக கொதிக்க வைத்து எடுத்து வடிகட்டி கொள்ள வேண்டும். இதை தொடர்ந்து பருகி வருவதால் உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படுகிறது. இவ்வாறு அன்றாடம் கிடைக்கும் பொருட்களை கொண்டு உயர் ரத்த அழுத்தத்தை இதன் மூலம் கட்டுப்படுத்தி பயன் பெறலாம்.

Loading...
Categories: Maruthuva Kurippugal in Tamil, Mooligai Maruthuvam, மூலிகை மருத்துவம்

Leave a Reply


Sponsors