நெல்லிக்காய்தயிர்பச்சடி|nellikai thayir pachadi in tamil

தேவையான பொருட்கள் :
2 or 3 நெல்லிக்காய் [ amla ]
2 or 3 முந்திரி பருப்பு [ விருப்பப்பட்டால் ]
2 or 3 பச்சை மிளகாய் [ அட்ஜஸ்ட் ]
3 Tsp தேங்காய் துருவல்
1/2 Tsp சீரகம் [ Jeera ]
1/2 cup தயிர்
3/4 Tsp உப்பு
தாளிக்க :
1/2 Tsp கடுகு
1 Tsp உளுத்தம் பருப்பு
1 Tsp எண்ணெய்

செய்முறை :
தயிரை தேக்கரண்டியால் நன்கு அடித்து கடைந்து வைக்கவும்.
நெல்லிக்காயின் கொட்டையை நீக்கி விட்டு சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
வாணலியை சூடாக்கி என்னை விட்டு கடுகு வெடிக்க விடவும்.
பிறகு உளுத்தம் பருப்பை போட்டு சிவக்க வறுக்கவும்.
பருப்பு சிவந்ததும் தாளித்ததை கடைந்து வைத்துள்ள தயிரின் மேல் கொட்டவும்.
அதே வாணலியில் நெல்லிக்காய் துண்டுகளை இலேசாக சிவக்கும் வரை வதக்கவும்.

nellikai thayir pachadi seimurai,nellikai thayir pachadi cooking tis in tamil,nellikai thayir pachadi samayal kurippu,nellikai

தயிர் நீங்கலாக மற்ற அனைத்தையும் வதக்கிய நெல்லிக்காயுடன் மிக்ஸியில் கொகொரப்பாக அரைத்தெடுக்கவும்.

ஒரு கிண்ணத்தில் அரைத்ததை எடுத்து வைக்கவும்.
அத்துடன் தயிரை சேர்த்து கலக்கவும்.
உப்பு சரி பார்க்கவும்

Loading...
Categories: Tamil Cooking Tips, சிற்றுண்டி

Leave a Reply


Sponsors