நோன்பு கஞ்சி (இலங்கை முறை)|nombu kanji tamil|srilankan samayal in tamil

தேவையான பொருட்கள்

பச்சரிசி அரைக்கிலோ
இறைச்சி கால் கிலோ (ஆடு கோழி ஏதாவது இறைச்சி போதுமானது)
பச்சை மிளகாய் 5 (உறைப்பக்கு ஏற்ப)
சீரகம், வெந்தயம், பூண்டு  தலா 1 தேக்கரண்டி
இஞ்சி நறுக்கியது
தக்காளி 1  நறுக்கியது
வெங்காயம் 1  நறுக்கியது
புதினா சிறிது
பசலை கீரை ஒகு கைப்பிடி நறுக்கியது
கறிமசாலா, மல்லிப்பொடி, ஜீரகப்பொடி தலா 1 தேக்கரண்டி
ஏலக்காய் 5,
கருவாப்பட்டை 2 பட்டை
கறிவேப்பிலை
கடுகு
தேங்காய்ப்பால் ஒன்றரை கப்
எண்ணெய் தாளிக்க

தயாரிக்கும் முறை

முதலில் அரிசியை நன்றாக கழுவி வைக்கவும்.

 

முதலில் வாணலியில் எண்ணைவிட்டு சூடானதும் ஏலக்காய், கறிவேப்பிலை போட்டு, கடுகு போட்டு வெடித்ததும், கருவாப்பட்டை, சீரகம், வெந்தயம் ஆகியவற்றைப்போட்டு வதங்கியதும் இஞ்சி பூண்டு போட்டு வெங்காயத்தையும் போட்டு வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி போட்டு வதக்கவும், அதில் தேவையான அளவு உப்பும் போடவும்.

nombu kanji  seimurai,nombu kanji  cooking tips in tamil,nombu k

பின்பு இதில் இறைச்சியையும் பச்சை மிளகாய், கறிமசாலா, மல்லிப்பொடி, ஜீரகப்பொடி அனைத்தையும் போட்டு வதக்கவும்.

இறைச்சி நன்றாக வதங்கியதும் ,

அரிசி வேகக்கூடிய அளவிற்கு ஒரு பாத்திரத்தில் இவற்றை போட்டு அரிசியையும் போட்டு நாலு மடங்கு அளவிற்கு நீர் விட்டு நன்றாக வேக விடவும்.

நீர் போதாது வந்தால் இடையில் நீர் விட்டுக்கொள்ளவும்

அரிசி நன்றாக மசிந்து வரக்கூடிய அளவிற்கு வெந்ததும் புதினா, பசலை கீரை போட்டு கீரை வெந்ததும் பால் விட்டு ஒரு தடவை கொதித்ததும் இறக்கிவிடலாம்.

Loading...
Categories: Non Vegetarian Recipes Tamil, ramalan samayal in tamil, Soup Recipe In Tamil, Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Sponsors