ரமலான் சமையல் நோன்பு கறி கஞ்சி|Nonbu curry kanji samayal kurippu

தேவையான பொருட்கள்:
அரிசி 1 – கப்
 சிறு பருப்பு – அரை  கப்
மட்டன் or கோழி  – 250 கிராம்
கேரட்,உருளைக்கிழங்கு- 100 கிராம் each
பட்டாணி- கொஞ்சமாக
தக்காளி –2
மஞ்சள் தூள் –அரை ஸ்பூண் 
மசாலா தூள்- 2 ஸ்பூண்
பட்டை,கருவா,ஏலம்
இஞ்சி,பூண்டு விழுது
பொடியாக நறுக்கிய வெங்காயம்
மிளகாய்-2
நெய்
தே.பால்- அரை கப்
உப்பு தேவையான அளவு
 Nonbu curry  kanji  seimurai,Nonbu curry  kanji  cooking tips in tamil,Nonbu curry  kanji  samayal kurippu,Nonbu curry  kanji  in
 செய்முறை:
உடைத்த அரிசி, வறுத்த சிறு பருப்பு இரண்டையும் நன்கு கழுவி வைக்கவும்.
ஒரு குக்கரில், கழுவிய கறி, இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள்தூள், மிளகாய் தூள். தேவையான உப்பு சேர்த்து தண்ணீர் வற்றும் அளவுக்கு நன்கு வேக வைக்கவும். அதனுடன், பொடியாக நறுக்கிய கேரட், உருளைக் கிழங்கு பட்டாணி ,தக்காளி, இவைகளைச் சேர்த்து வேக விடவும்.
இந்த கலவையுடன் 1:3 அளவுக்கு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
கொதி வந்ததும் அதனுடன், களைந்து வைத்திருக்கும் அரிசி,பருப்பு சேர்த்து நன்கு மசிய வேக விடவும்.
நன்கு அனைத்தும் வெந்ததும் இறக்கி ஆற வைத்து மிக்ஸியில் 2×3 சுற்று அரைத்துக் கொள்ளவும்.
பின் அடுப்பில் வாணலியை வைத்து, நெய் ஊற்றி காய்ந்ததும், அதில்,பட்டை கருவா,ஏலம் நறுக்கிய வெங்காயம்சேர்த்து நன்கு வதக்கி அதனுடன் அரைத்து வைத்த கலவையை கலந்து அதனுடன் தேங்காய் பாலும் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி விடவும்.
சூப்பர் நோன்பு கறிக் கஞ்சி ரெடி.
இதற்கு சரியான காம்பினேஷன் மஞ்சள் அல்லது காயல் வாடா தான். நாளைக்கு வாடா செய்வதை பற்றி இன்ஷா அல்லாஹ் பார்ப்போம்.
Loading...
Categories: Non Vegetarian Recipes Tamil, ramalan samayal in tamil, Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Sponsors