வெள்ளரிக்காய் தால்|paruppu samayal kurippugal tamil

தேவையான பொருட்கள்:

வெள்ளரிக்காய் – 1
துவரம் பருப்பு – 100 கிராம்
வெங்காயம் – 1 (நறுக்கியது)
பூண்டு – 4 (நறுக்கியது)
வரமிளகாய் – 2
பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது)
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
கடுகு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
புளிச்சாறு – சிறிது

 

paruppu samayal,paruppu samayal,samayal paruppu podi,sivakasi samayal paruppu rasam,tamil samayal paruppu

செய்முறை:

முதலில் துவரம் பருப்பை குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி, 3-4 விசில் விட்டு வேக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் வெள்ளரிக்காயை தோல் நீக்கிவிட்டு, துண்டுகளாக்கி கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், பெருங்காயத் தூள், வரமிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
பிறகு அதில் பூண்டு, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, பின் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கவும்.

அடுத்து அதில் வெள்ளரிக்காய் துண்டுகளை சேர்த்து சிறிது வதக்கி, தண்ணீர் சிறிது ஊற்றி, மூடி வைத்து மிதமான தீயில் வேக வைக்கவும்.

வெள்ளரிக்காய் ஓராளவு வெந்ததும், அத்துடன் வேக வைத்துள்ள பருப்பை சேர்த்து, அதோடு வெண்ணெயையும் சேர்த்து கிளறி, சிறிது புளிச்சாற்றினை சேர்த்து கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால் வெள்ளரிக்காய் தால் ரெடி!!!

Loading...
Categories: arokiya unavu in tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors