குப்பை மேனி-பாட்டி-வைத்தியம்|pattivaithiyam kuppaimeni keerai

தெரு ஓரங்களில் சர்வ சாதாரணமாகக் கிடைக்கும் ஒரு மூலிகை. இம்மூலிகைக்கு சித்தர்கள் வைத்திருக்கும் பரிபாஷை பெயர் பூனை வணங்கி.

  1. இதன் இலையுடன் மஞ்சள், சிறிது உப்பு சோ்த்தரைத்து சொரி சிரங்குகளின் மேல் பூச விரைவில் குணமாகும். தோல் நோய்களும் குணமாகும்.
  2. இலைச்சாறு சமன் பசும்பாலுடன் கலந்து உரைகுத்தி தயிரை மாதவிலக்கான 3 நாட்களும் காலை வெறும் வயிற்றில் குடிக்க குழந்தைப் பேறு உண்டாகும்.
  3. இதன் இலைச்சாற்றை வலது காதில் விட இடக்கண் நோயும், இடது காதில் விட வலக்கண் நோயும் இரு காதிலும் விட இரண்டு கண்களிலும் ஏற்பட்டுள்ள கண்நோய் குணமாகும்.

குப்பை மேனி-பாட்டி-வைத்தியம்,pattivaithiyam kuppaimeni keerai

  1. இலையை பொடி செய்து மூக்குபொடி போல் உபயோகிக்க தலைவலி நீங்கும்
  2. செடியை வேருடன் பிடுங்கி நிழலில் உலர்த்தி இடித்து வஸ்திரகாயம் செய்து (மெல்லிய துணியில் சலித்து) ஒரு சிட்டிகை பொடியை நெய்சோ்த்து காலை மாலை 40 நாட்கள் உண்டுவர பவுத்திரம் நோய் நீங்கும்.
  3. வேரைபொடி செய்து கஷாயம் செய்து (ஒரு லிட்டரை அரைக்கால் லிட்டராக காய்ச்சி)குடிக்க நாக்குபூச்சி, வயிற்று கிருமிகள், நாடா புழு நீங்கும்

வேறு பலன்களை அவ்வப்போது இணைக்கிறே

Loading...
Categories: Mooligai Maruthuvam, Pattivaithiyam, மூலிகை மருத்துவம்

Leave a Reply


Sponsors