பீர்க்கங்காய் தோல் புதினா துவையல்|peerkangai thol thogayal in tamil

பீர்க்கங்காய் தோல் – 1 கப்
புதினா – 1/2 கப்
கொத்தமல்லி – 1/2 கப்
தேங்காய் – 1/2 கப்
பெருங்காயம் – 1/2 தே.கரண்டி
புளி – சிறிய துண்டு
பச்சை மிளகாய் – 2
உளுத்தம் பருப்பு – 2 மேஜை கரண்டி
உப்பு – 3/4 தே.கரண்டி
எண்ணெய் – 1 தே.கரண்டி

 

peerkangai thol thogayal in tamil seimurai,peerkangai thol thogayal in tamil cooking tips in tamil,peerkangai thol thogayal in tamil samayal kurippu,

முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்து கொள்ளவும்.
புதினா, கொத்தமல்லியை சுத்தம் செய்து கழுவி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பினை வறுத்து தனியாக வைக்கவும்.
அதே கடாயில் பீர்க்கங்காய் தோலினை சேர்த்து நன்றாக வதக்கி தனியாக வைக்கவும்.
பிறகு புதினா, கொத்தமல்லி மற்றும் பச்சை மிளகாயினை சேர்த்து நன்றாக வதக்கவும்.
வதக்கி வைத்துள்ள அனைத்து பொருட்களையும் சிறிது நேரம் ஆறவைக்கவும்.
பிறகு ஆறவைத்துள்ள பொருட்களுடன் தேங்காய் , புளி, பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
இப்பொழுது சுவையான பீர்க்கங்காய் புதினா துவையல் ரெடி.
இதனை இட்லி, தோசை, சாதம் போன்றவையுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

குறிப்பு:
பச்சை மிளகாயிற்கு பதில் காய்ந்த மிளகாய் சேர்த்து கொள்ளலாம்

Loading...
Categories: arokiya unavu in tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors