தூங்கும் முன் ஒரு டம்ளர் புதினா டீ |pudina tea Maruthuva Kurippugal in Tamil

ஒவ்வொருவரும் தங்களை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள டீ அல்லது காபியைக் குடிப்போம். சிலருக்கு மூலிகை டீ குடிக்க பிடிக்கும். அப்படி மூலிகை டீயை விரும்புவோருக்கு புதினா டீ மிகவும் விருப்பமான ஒன்றாக இருக்கும்.
புதினா டீ சுவையாகவும், மணமாகவும் இருப்பதோடு, உடலுக்கு பல்வேறு நன்மைகளையும் வாரி வழங்கும். ஒருவர் புதினா டீயை தினமும் ஒரு டம்ளர் பருகி வந்தால், உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.
pudina tea Maruthuva Kurippugal in Tamil
அதிலும் இதனை இரவில் படுக்கும் முன் ஒரு டம்ளர் குடித்தால், உடல்நல கோளாறுகளைத் தடுக்கலாம். சரி, இப்போது தூங்கும் முன் ஒரு டம்ளர் புதினா டீ குடித்தால் உடலினுள் ஏற்படும் மாற்றங்கள் குறித்துக் காண்போம்.
வாய்வுத் தொல்லை இரவு நேரத்தில் ஒரு டம்ளர் புதினா டீயைப் பருகினால், அது வயிறு உப்புசம் மற்றும் வாய்வுத் தொல்லையில் இருந்து நிவாரணம் தரும். எப்படியெனில் புதினா தசைகளை ரிலாக்ஸ் அடையச் செய்து, செரிமானத்தின் போது உற்பத்தி செய்யப்படும் வாயுக்களை எளிதில் வெளியேறச் செய்து, வாய்வுத் தொல்லையில் இருந்து உடனடி நிவாரணம் தரும்.
நிம்மதியான தூக்கம் பொதுவாக டீயை இரவில் குடிக்கக்கூடாது என்று கூறுவார்கள். ஏனெனில் அதில் உள்ள காப்ஃபைன் தூக்கத்தைக் கெடுக்கும். ஆனால் புதினா டீயில் காப்ஃபைன் இல்லை. மேலும் இதனைப் பருகினால், நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.
செரிமான பிரச்சனை புதினா டீயைக் குடிப்பதால் பெறும் மற்றொரு நன்மை, இது செரிமான பிரச்சனைகள் மற்றும் நெஞ்செரிச்சலைத் தடுக்கும். இந்த டீ தசைகளை அமைதியடையச் செய்து, வயிற்றில் பித்தநீரின் ஓட்டத்தை மேம்படுத்துவதோடு, உண்ட உணவு எளிதில் செரிமானமடையவும் செய்யும்.
காலைச் சோர்வு கர்ப்பிணிகளுக்கு புதினா டீ மிகவும் சிறப்பானது. ஏனெனில் இதனை கர்ப்பிணிகள் பருகினால், காலையில் ஏற்படும் சோர்வு தடுக்கப்படும். மேலும் இரவில் நல்ல தூக்கத்தைப் பெற உதவும்.
உடல் எடை உடல் பருமனால் கஷ்டப்படுபவர்கள், தினமும் ஒரு டம்ளர் புதினா டீயைப் பருகினால், உடல் எடையைக் குறைக்கலாம். இதற்கு இந்த டீ செரிமானத்தை சீராக்குவது தான் முதன்மையான காரணம்.
பருகக்கூடாதவர்கள் புதினா ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பொருள் தான் என்றாலும், இது அனைவரும் பருகுவதற்கு ஏற்றதல்ல. முக்கியமாக இந்த டீயை இரையக உண்குழலிய எதிர்வினை நோய் உள்ளவர்கள் அல்லது ஹையாடல் குடலிறக்கம் உள்ளவர்கள் அறவேத் தவிர்க்க வேண்டும்.
Loading...
Categories: Maruthuva Kurippugal in Tamil

Leave a Reply


Sponsors