இராசவள்ளிக்கிழங்கு கஞ்சி|rasavali kanji in tamil

Loading...
 • இராசவள்ளிக் கிழங்கு – 1
 • தேங்காய்ப்பால் (முதற்பால்) – 1/2 கப்
 • தேங்காய்ப்பால் (இடண்டாம்பால்) – 2 கப்
 • சீனி – 1 – 11/2 கப்
 • உப்பு – 1 சிட்டிகை
 • இராசவள்ளிக் கிழங்கை தோல் சீவி சிறு துண்டுகளாக வெட்டவும் – ~2 கப் வர வேண்டும்.
 • பின்னர் ஒரு பாத்திரத்தில் தேங்காய் இரண்டாம் பால், கிழங்கு துண்டுகளைப்போட்டு அவிய விடவும்.
 • கிழங்கு நன்கு அவிந்ததும் சீனி, உப்பு போட்டு கலந்து மெல்லிய நெருப்பில் கொதிக்க விடவும்.
 • சீனி கரைந்ததும் கிழங்கை அகப்பை அல்லது மத்தால் நன்கு மசித்து கூழாக்கி விடவும்.
 • பின்னர் தேங்காய் முதற் பாலை விட்டு காய்ச்சவும்.
 • ஒன்று அல்லது இரண்டு கொதி வந்ததும் இறக்கவும்.
 • சுவையான இராசவள்ளிக்கிழங்கு கஞ்சி தயார். சுடச்சுடவும் குடிக்கலாம். அல்லது ஆறவிட்டும் குடிக்கலாம். மிகவும் சுவையாக இருக்கும்.

 

rasavali kanji in tamil

குறிப்பு:

தேங்காய்ப்பாலில் அவிய விடுவதற்குப் பதிலாக தண்ணீரில் அவிய விட்டும் இறுதியாக முதற்பால் விட்டும் இறக்கலாம். தேவைக்கேற்ப சீனியை கூட்டி குறைக்கலாம். இதனை சிறிது வற்றக் காய்ச்சி தடிப்பான பதத்தில் எடுத்து புடிங் கிண்ணத்தில் ஊற்றி(வட்டமான சிறிய கிண்ணங்கள்) ஆறியதும் ஃபிரீஸரினுள் வைத்து சிறிது இறுகியதும் புடிங் போலவும் சாப்பிடலாம். அல்லது கேக் பானில் ஊற்றி ஃபிரீஸரில் வைத்து சிறிது இறுகியதும் துண்டுகளாக்கியும் சாப்பிடலாம்

Loading...
Loading...
Categories: arokiya unavu in tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சிற்றுண்டி, சைவம்

Leave a Reply


Recent Recipes

Sponsors