குழந்தைகளுக்கான சத்து மாவு|sathu maavu seivathu eppadi

தேவையான பொருட்கள்

அரிசி – 1.5 கப்

பார்லி – 1 கப்

பொரிக்கடலை – 1 கப்

முழு உளுத்தம் பருப்பு – 1 கப்

பாசிப்பயறு – 1 கப்

பசிப்பருப்பு – 1/2 கப்

பருப்பு – 1/2 கப்

உடைத்த கோதுமை – 1 கப்

முந்திரி பருப்பு – 1/2 கப்

பாதாம் – 1/2 கப்

சீரகம் – 1 தேக்கரண்டி

ஓமம் – 1/2 தேக்கரண்டி

ஏலக்காய் – 10

செய்முறை

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

பாசிப் பயறு மற்றும் உழுத்தம் பருப்பை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்

sathu maavu seimurai,sathu maavu cooking tips in tamil,sathu maavu samayal
நன்கு கழுவவும்

பின்பு அதனை வடிகட்டி தனியே வைக்கவும்

ஒரு அடி கனமான பாத்திரத்தை சூடாக்கவும்

அதில் சுத்தம் செய்து வைத்திருக்கும் பாசிப் பயறு மற்றும் உழுத்தம் பருப்பை போட்டு பொன்னிறமாக வறுக்கவும்

பின்பு அதனை ஒரு தட்டில் வைத்து ஆற வைக்கவும்

பின்பு பருப்பு மற்றும் பாசிப்பருப்பை கழுவி ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்

அதனையும் அதே கடாயில் போட்டு வறுத்தெடுக்கவும்

அதனை அதே தட்டில் எடுத்து வைக்கவும்

பின்பு பொரிக்கடலையை வடுத்து வறுத்துக் கொள்ளவும்

அதனையும் பாத்திரத்தில் வைக்கவும்

பின்பு அரிசி மற்றும் பார்லியை எடுத்துக் கொள்ளவும்

நன்கு சுத்தம் செய்து கொள்ளவும்

பின்பு வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்

பின்பு அதனை ஒரு பெரிய கடாயில் போட்டு வறுத்துக் கொள்ளவும்

அதனையும் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்

அதனையும் அதே தட்டில் வைக்கவும்

பின்பு சிறிது உடைத்த கோதுமையை வறுத்துக் கொள்ளவும்

வாசம் வரும் வரை வறுக்கவும்

அதனையும் அதே தட்டில் வைக்கவும்

பின்பு முந்திரி பருப்பையும் பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.பாதாமையும் சேர்த்துக் கொள்ளலாம்

அதனையும் அதே தட்டில் வைக்கவும்

பின்னும் ஓமம் மற்றும் ஜீரகத்தையும் அதே போல் வறுத்துக் கொள்ளவும்

அதனையும் தட்டில் வைக்கவும்

இனிப்பு தேவைப்பட்டால் ஜீரகம் மற்றும் ஓமம் ஆகியவற்றிற்கு பதிலாக ஏலக்காய் சேர்த்துக் கொள்ளலாம்

பின்பு இவை அனைத்தையும் அரைத்துக் கொள்ளவும்

பின்பு அதனை சல்லடை மூலம் சலித்து எடுத்துக் கொள்ளவும்

அதனை ஒரு தட்டில் வைத்து ஆற வைக்கவும்

பின்பு அதனை காற்று புகாத டப்பாக்களில் வைத்து பயன் படுத்தவும்

Loading...
Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சிற்றுண்டி, சைவம்

Leave a Reply


Sponsors