சேனைக்கிழங்கு மசாலா வறுவல்|senai kizhangu masala varuval|senai kizhangu samyalkurippugal

தேவையான பொருட்கள்:

சேனைக்கிழங்கு – 200 கிராம் (சுமார் 25 துண்டுகள்)
கடலைப்பருப்பு – 1/2 கோப்பை
கொத்தமல்லி விதை – 4 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் – 10
சின்ன வெங்காயம் – 8
பூண்டு – 4 பற்கள்
சோம்பு – 1/2 மேசைக்கரண்டி
மஞ்சள் பொடி – 1/2 தேக்கரண்டி
எண்ணெய் – 150 மிலி.
உப்பு – தேவையான அளவு

senai kizhangu masala varuval seimurai,senai kizhangu masala varuval cooking tips in tamil,senai kizhangu masala varuval samayal kurippu,s

செய்முறை:

சேனைக்கிழங்கைத் தோல் சீவி, செவ்வகத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
கிழங்குடன் மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து அரை வேக்காடு வேக வைத்துத் தண்ணீரை வடிகட்டி விடவும்.
கடலைப்பருப்பு, கொத்தமல்லி விதை, மிளகாய்வற்றல் சோம்பு இவற்றை மிக்ஸியில் பொடிக்கவும்; தூள் தூளாக இல்லாமல் ஒன்றிரண்டாகப் பொடி செய்யவும்.
பின் சின்ன வெங்காயம், பூண்டு இரண்டையும் அதனுடன் சேர்த்து, சிறிதளவு தண்ணீரும் சேர்த்து விழுதாக, மசாலா வடைப் பக்குவத்துக்கு அரைக்கவும்.
இந்த விழுதை, வேகவைத்து ஆறிய கிழங்குகளுடன் நன்கு கலந்து ஒரு பத்து நிமிடம் அப்படியே வைக்கவும்.
பின் வாணலியில் எண்ணெய் காய வைக்கவும்.
எண்ணெய் நன்கு காய்ந்ததும் மசாலாவுடன் பிசறிய கிழங்கை கொஞ்சம் கொஞ்சமாகப் பொரித்து எடுக்கவும்.

குறிப்பு:

சேனைக்கிழங்கு என்று தென் மாவட்டங்களில் அறியப்படும் இக்கிழங்கு, சில இடங்களில் கருணைக்கிழங்கு என்றும் கூறப்படுவதுண்டு.

Loading...
Categories: arokiya unavu in tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors