சிவப்பு அரிசி ஆப்பம்|sigappu arisi appam samayal kurippu tamil

தேவையானவை: சிவப்பு அரிசி அரை கிலோ, தேங்காய்த்துருவல் 20 கிராம், வெல்லம் சிறிய துண்டு, தண்ணீர், உப்பு சிறிதளவு, தேங்காய் ஒன்று


செய்முறை:
சிவப்பு அரிசியில் தண்ணீர் ஊற்றி, ஒரு மணி நேரம் ஊறவைத்து, பிறகு தேங்காய்த்துருவல், வெல்லம் சேர்த்து, கிரைண்டரில் மாவாக அரைக்கவும். எட்டு மணி நேரம் மாவை நொதிக்கவைத்து, ஆப்ப சட்டியில் ஊற்றி மூடிவைக்கவும். ஒரு நிமிடம் கழித்துத் திறந்தால் சுவையான ஆப்பம் ரெடி.

தேங்காயை அரைத்து தேங்காய்ப்பால் எடுத்துக்கொள்ளவும். தேங்காய்ப்பால் பிடிக்காதவர்கள், பால் சேர்த்துக்கொள்ளலாம்.

சிவப்பு-அரிசி-ஆப்பம்sigappu arisi appam seimurai,sigappu arisi appam cooking tips in tamil,sigappu arisi appam samayal kurippu,sigappu arisi


பலன்கள்:
வயிற்றில் புண், அல்சர் இருப்பவர்கள், ஒல்லியாக இருப்பவர்களுக்கு ஏற்ற உணவு இது. நார்ச்சத்து, பி காம்ப்ளக்ஸ் இந்த உணவில் இருக்கிறது. சிவப்பு அரிசி உடலுக்கு வலுவூட்டும். எனவே உடற்பயிற்சி செய்பவர்கள், விளையாட்டு வீரர்கள் தினமும் இந்த ஆப்பம் சாப்பிடலாம். உடல் எடை அதிகமாக இருப்பவர்கள், இந்த உணவைத் தவிர்க்கவும்.

Categories: Dosai recipes in tamil, Rice Recipes In Tamil, Saiva samyal, Tamil Cooking Tips, இனிப்பு வகைகள், சிற்றுண்டி, சைவம்

Leave a Reply


Sponsors