ஸ்வீட் சமோசா| sweet samosa cooking tips in tamil samayal kurippu

Loading...

மேல் மாவுக்கு:
மைதா – 1 கப்,
பொடித்த சர்க்கரை – 1 டீஸ்பூன்,
உருக்கிய நெய் அல்லது வெண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்,
மெல்லிய சீரோட்டி ரவை – 1 டேபிள்ஸ்பூன்,
பேக்கிங் பவுடர் – 1 சிட்டிகை.
sweet samosa cooking tips in tamil,sweet samosa samayal kurippu,sweet samosa in tamil,sweet samosa seimurai,sweet samosa samayal kurippu in tamil language
பூரணம் செய்ய:
உதிர்த்த பனீர் – 1 கப்,
உதிர்த்த சர்க்கரை இல்லாத கோவா – முக்கால் கப்,
பொடித்த சர்க்கரை – அரை கப்,
பொடியாக நறுக்கிய முந்திரி,
திராட்சை – சிறிது.
மேல் மாவுக்குக் கொடுத்துள்ள எல்லாவற்றையும் சேர்த்து விரல்களால் நன்றாகக் கலக்கவும். உருக்கிய நெய்யைச் சேர்த்துப் பிசையவும். தேவையானால் சிறிது தண்ணீர் விட்டுக் கெட்டியாகப் பிசைந்து, ஒரு மெல்லிய ஈரத் துணியால் மூடி, 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
பூரணம் செய்யக் கொடுத்துள்ள எல்லாவற்றையும் சேர்த்துக் கலக்கவும். தேவையானால் 1 நிமிடம் மிதமான தீயில் கிளறியும் வைக்கலாம்.

சமோசா செய்ய:

ஊறிய மேல் மாவை மீண்டும் பிசைந்து, சிறு உருண்டைகளாக்கி பூரிகளாக இடவும். ஒவ்வொரு பூரியையும் பாதியாக வெட்டவும். ஒவ்வொரு பாதியையும் முக்கோணமாக மடித்து, உள்ளே ஒரு ஸ்பூன் பூரணத்தை நிரப்பவும். முக்கோணத்தின் மேல் பகுதியை இழுத்து, சிறிது தண்ணீர் தடவி, ஓரங்களை விரிசல் வராமல் ஒட்டவும். கடாயில் எண்ணெய் காய வைத்து, ஒவ்வொரு சமோசாவாக பொறுமையாகப் பொரித்தெடுக்கவும்.

Loading...
Loading...
Categories: Saiva samyal, Tamil Cooking Tips, இனிப்பு வகைகள், சிற்றுண்டி, சைவம்

Leave a Reply


Recent Recipes

Sponsors