அவரை – மொச்சை சாதம் பிராமண சமையல்|tamil brahmin recipe

தேவையானவை –

அவரைக்காய் பொடியாக நறுக்கியது – 1 கப்
மொச்சை – 1 கப்
வெங்காயம் – 2
தக்காளி – 3
இஞ்சி,பூண்டு விழுது – 3 ஸ்பூன்
மஞ்சள் தூள் – தேவைக்கு
மிளகாய்தூள் –  தேவைக்கு
கரம் மசாலா தூள் – 1ஸ்பூன்
உப்பு – தேவைக்கு
தயிர் – 3 ஸ்பூன்
எண்ணைய் -தேவைக்கு

தாளிக்க – பிரியாணி இலை,கடுகு,முந்திரி,கருவேப்பிலை,லவங்கம்,பட்டை

200 கிராம் அரிசி உதிராக வடித்த சாதம்

தயாரிக்கும் முறை

செய்முறை –

சாதம் உதிராக வடித்து ஆற விடவும்.காய்கறிகளை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். மொச்சையை ஊறவைத்து வேகவைக்கவும்.

 tamil brahmin recipe   seimurai,tamil brahmin recipe   cooking t

வாணலியில்  எண்ணைய் ஊற்றி,காய்ந்ததும்,கடுகு வெடிக்கவிட்டு,பிரியாணி இலை.லவங்கம்,பட்டை,கருவேப்பிலை தாளித்து,வெங்காயம் சேர்த்து வதக்கவும்.பிறகு தக்காளி,அவரைக்காய் என ஒவ்வொன்றாய் சேர்த்து வதக்கவும். இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.வேக வைத்த மொச்சை பயறை சேர்த்து ,மஞ்சள் தூள்,மிளகாய்தூள்,கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கி உப்பு சேர்க்கவும். தயிர் சேர்த்து கிளறவும்.வெந்தவுடன் இறக்கி ஆற வைத்த சாதம் சேர்த்து கலக்கவும்.முந்திரி தாளித்து அலங்கரிக்கவும்.

சுவையான அவரை -மொச்சை சாதம் மதிய உணவுக்கு சுலபமாக தயாரிக்கக் கூடியது.இதில் காரம்,காய்கறி,பயறு இவற்றை அவரவர் விருப்பம் போல் மாற்றி மாற்றி தேர்ந்தெடுத்து விதவிதமாக மதிய உணவு தயார் செய்யலாம்.

Loading...
Categories: Iyengar Samayal, Rice Recipes In Tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சைவம், பிராமண சமையல்

Leave a Reply


Sponsors