உங்களது தொடை கருமையாக இருக்கின்றதா|thodai karumai neenga Azhagu Kurippugal

பெரும்பாலும் பெண்களுக்கு மற்ற பகுதிகளை விட, அதிக அளவில் கருமையாக இருக்கும் இடங்கள் என்றால், அக்குள், பிறப்புறுப்பு மற்றும் உள் தொடை தான்.
அதுமட்டுமின்றி, அப்பகுதிகளில் எவ்வித பராமரிப்பும் கொடுக்காததால், அப்பகுதி மிகவும் கருமையாகவே உள்ளது.

பெண்களுக்கு எவ்வளவு தான் முகம், கை மற்றும் கால் வெள்ளையாக இருந்தாலும், உள் தொடை கருப்பாக இருந்தால் முழங்கால் அளவுள்ள ஆடைகளை அணிய சங்கடமாக இருக்கும். பொதுவாக சருமங்கள் உரசிக்கொண்டால், அப்பகுதியானது கருமையாகும்.

அதுமட்டுமின்றி, குண்டாக இருப்பது, அடிக்கடி ஷேவிங் செய்வது, காற்றோட்டம் இல்லாதது, வயதாவது, சருமம் வறட்சிடைவது போன்றவற்றாலும் சருமமானது கருமையாகலாம். ஆனால் அவ்விடங்களில போதிய பராமரிப்பு கொடுத்தால், அவற்றையும் மற்ற பகுதிகளைப் போல் வெள்ளையாக்கலாம்.

thodai karumai neenga Azhagu Kurippugal

• தற்போது கடைகளில் பலவிதமான கிரீம்கள் மற்றும் லோசன்கள் கிடைக்கின்றனர். அவற்றில் எலுமிச்சை மற்றும் மஞ்சள் கலந்த க்ரீம்களை வாங்கி முழங்கை, கால், உள் தொடை ஆகிய இடங்களில் தடவினால், அவை சருமத்தில் வறட்சி ஏற்படுவதை தடுப்பதோடு, கருமையையும் விரைவில் போக்கும்.

• நல்லெண்ணெயில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து, அதனை கருமையாக உள்ள உள் தொடையில் தடவி 15 நிமிடம் மசாஜ் செய்து, 10 நிமிடம் கழித்து குளிக்க வேண்டும். இப்படி அன்றாடம் செய்தால் நல்ல மாற்றம் தெரியும்.

• தினமும் குளிப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன், 1 டேபிள் ஸ்பூன் பால் பவுடருடன், எலுமிச்சை சாறு, தேன் மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து, அதனை உள் தொடையில் தடவி ஊற வைத்து குளிக்க வேண்டும். இதன் மூலமும் நல்ல பலன் கிடைக்கும்.

• ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் பேக்கிங் பவுடர் உள் தொடையில் உள்ள கருமையைப் போக்க ஆப்பிள் சீடர் வினிகரில் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி, நன்கு காய்ந்ததும், குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

இந்த முறையை ஒரு வாரம் மட்டுமே செய்ய வேண்டும்.

Loading...
Categories: Azhagu Kurippugal, Beauty Tips Tamil

Leave a Reply


Sponsors