டொமெட்டோ நூடுல்ஸ்| tomato noodles cooking tips in tamil

தேவைப்படும் பொருட்கள்
சைனீஸ் நூடுல்ஸ்- ஒரு பாக்கெட்
தக்காளி-4
வெங்காயம்-2
பச்சைமிளகாய்-2
கறிவேப்பிலை- ஒருகொத்து
டொமெட்டோ சாஸ்-ஒரு குழிகரண்டி
சோயா சாஸ்- 2 ஸ்பூன்
உப்பு-தேவைக்கு
எண்ணெய்-தாளிக்க தகுந்தபடி

வெங்காயம்,தக்காளி, மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கவும்.

ஒருபாத்திரத்தில் நீர் ஊற்றி 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு கொதிக்க விடவும்.

நன்கு கொதித்ததும் அணைத்துவிட்டு நூடுல்ஸை சேர்த்து மூடிவிடவும்.

2 நிமிடங்கள் கழித்து நீரை வடித்து குளிர்ந்த நீரில் அலசி நீரை முழுவதுமாக வடிக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, மிளகாய் தாளிக்கவும்.

பின்னர் வெங்காயம், உப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கிய பின் தக்காளியை சேர்த்து குழையும் வரை வதக்கவும்

கலவையை ஓரங்களில் ஒதுக்கி நடுவில் முட்டையை உடைத்தூற்றி கிளறவும். பின் மொத்தமாக எல்லா கலவையும் ஒரு சேர கிளறவும்.

தக்காளி சாஸ், சோயா சாஸ் ஊற்றி எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.

கலவையில் எண்ணெய் பிரிந்து வந்ததும் நூடுல்ஸை சேர்க்கவும்.

உடையாமல் மசாலா கலவை நூடுல்ஸில் சேரும்படி கிளறவும்.

டொமெட்டோ நூடுல்ஸ் தயார். டொமெட்டோ சாஸ் உடன் பரிமாறவும்.

tomato noodles seimurai, tomato noodles cooking tips in tamil, tomato noodles samayal kurippu, tomatoகுறிப்புகள்
கரண்டிக்கு பதில் இடுக்கி உபயோகப்படுத்தலாம். இதனால் உடையாமல் இருக்கும். அனுபவம் இருந்தால் குலுக்கி விட்டு மசாலா ஒருசேர ஆகும்படி செய்யலாம்.
மேலே சொன்ன பக்குவப்படி நூடுல்ஸ் வேகவைத்து எடுத்தால் உதிரியாகவும், குழையாமலும் வரும்.

Loading...
Categories: noodles recipes in Tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சிற்றுண்டி, சைவம்

Leave a Reply


Sponsors