உடல் எடை குறைக்க உதவும் பட்டை இஞ்சி டீ|udal edai kuraiya valigal tamil

Loading...

உடல் எடை என்பது இப்போது உள்ள காலகட்டங்களில் அனைவரிடமும் பொதுவாக காணப்படும் பிரச்சனையாக உள்ளது.

சிலர் எனது உடல் எடையை குறைக்க முடியவில்லையே என புலம்புவதும் உண்டு. அதனை பற்றிய பல சிகிச்சை முறைகளை நாம் அன்றாடம் பத்திரிக்கைகளிலோ அல்லது தொலைக்காட்சியிலோ பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இது பலருக்கும் பயனளிக்காமல் போய் இருக்கலாம். உடல் எடையை குறைக்கும் பொருட்களை உங்களது சமையல் அறையில் வைத்துக் கொண்டு ஏன் வெளியில் தேடிக் கொண்டிருக்கிறீர்கள்?

ஆம் தினசரி நாம் உணவில் பயன்படுத்தும் பட்டை, இஞ்சி தான் அந்த பொருள்கள். தினசரி காலையில் சூடாக ஒரு பட்டை இஞ்சி குடித்தால் போதுமானது. உடல் எடையில் மாற்றம் தெரிய ஆரம்பித்துவிடும்.

udal edai kuraiya valigal tamil,udal edai kuraiya,thoppaiwegit loss

எடையை குறைக்க உதவும் அந்த டீயை எவ்வாறு தயாரிப்பது என்பது பற்றி பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

பட்டை – 2 இன்ச்

இஞ்சி – 1/2 இன்ச் (துருவியது)

ப்ளாக் டீ இலைகள் – 1 டீஸ்பூன்

எலுமிச்சை – 2 துண்டுகள்

புதினா – 5 முதல் 6 இலைகள

தேன் – தேவையான அளவு

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் பட்டையை போட்டு கொதிக்க விட வேண்டும். நீரானது கொதிக்க ஆரம்பித்ததும், இஞ்சி மற்றும் புதினாவை சேர்த்து 2 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விடவும்.

பின்பு டீ இலைகளை சேர்த்து, அடுப்பை அணைத்து, 3-4 நிமிடம் மூடி வைத்து ஊற வைக்க வேண்டும்.

பிறகு அதனை வடிகட்டி, அதில் எலுமிச்சை சாற்றினை பிழிந்து, பின் தேன் சேர்த்து கலந்து பரிமாறினால், பட்டை இஞ்சி டீ தயாராகி விடும்.

தினசரி இந்த டீயை குடித்து வந்தால் உடல் எடை குறைவது மட்டுமல்லாமல் உடல் புத்துணர்வும் பெறும்.

Loading...
Loading...
Categories: Weight Loss Tips in Tamil, தொப்பை குறைய

Leave a Reply


Recent Recipes

Sponsors