உளுந்தங்களி|ulutham kali cooking tips in tamil

ulutham kali seimurai

 

உளுந்து       – அரை கிலோ
பச்சரிசி       – 150 கிராம்
கருப்பட்டி       – முக்கால் கிலோ
நல்லெண்ணெய்   – 100 மில்லி
உளுந்தை வறுத்துக் கொள்ளுங்கள். வறுத்த உளுந்தில் பச்சரிசியைச் சேர்த்து மாவாக பொடித்துக் கொள்ளுங்கள். கருப்பட்டியை உடைத்துப்போட்டு பாகு காய்ச்சுங்கள். பாகின் அடியில் தங்கும் கழிவுகளை அரித்து எடுத்துவிட்டு மாவை சிறிது, சிறிதாகக் கொட்டி கிளறுங்கள். பின் நல்லெண்ணைய் ஊற்றி சிறிது நேரம் வேகவிட்டு கிளறி இறக்குங்கள். சுவையும் மணமுமான உளுந்தங்களி ரெடி!

 

ulutham kali cooking tips in tamil

பெண்களுக்கு திட உணவு…

அரை கப் உளுந்தை வாணலியில் வறுத்து, அதோடு 1/2 கப் அரிசி சேர்த்து மாவாக்கி சலித்து கொள்ளவும்.

2 கப் உடைத்த கருப்பட்டி வெல்லத்தோடு தண்ணீர் 2 கப் விட்டு சூடாக்கி, வெள்ளம் கரைந்ததும் அரை வடிகட்டி தனியாக எடுத்துக்கொள்ளவும்.

வடி கட்டி எடுத்த வெல்லக்கரைசலுடன் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து சூடாக்கவும். அது நன்கு கொதிக்கும்போது மாவை அதனுடன் சேர்த்து நன்கு கிளறி, குறைந்த தணலில் சுமார் 10௦ நிமிடங்கள் வரை வேக விடவும்.

பின்னர் அடுப்பில் இருந்து இறக்கி, 2 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு கலந்து சாப்பிடலாம்.

ulutham kali samayal kurippu

தேவையான பொருட்கள்….

கறுப்பு உளுந்து – 1 கைப்பிடி
கருப்பட்டி – தேவையான அளவு
செய்முறை…
• கடாயில் கறுப்பு உளுந்தை போட்டு பொன்னிறமாகி, வாசனை வரும் வரை வறுத்து, அரைத்து மாவாக்கிக் கொள்ளவும்.
• பின்னர் கருப்பட்டி பாகு காய்ச்சி அதோடு உளுந்து மாவு சேர்த்து நல்லெண்ணெய் விட்டு கிளறி இறக்க வேண்டும்.
• தண்ணீர் படாமல் இருந்தால் 3 நாள்கள் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.
குறிப்பு….
குழந்தைகளின் உடல் வளர்ச்சி, உறுதிக்கு தேவையான கால்சியம், புரோட்டீன் போன்றவை இதில் உள்ளது. பெண்கள் சாப்பிட்டால் கர்ப்பப்பை பலம் பெறும். இடுப்பு வலியும் வராது. ஆண்களுக்கு உடல் உறுதியை தருவதோடு, குழந்தையின்மை பிரச்சினைக்கு நல்ல தீர்வை தரும்.
ஆனால் 40 வயதுக்கு மேல் உள்ளவர்கள், ஒருநாள் 50 கிராமுக்கு மேல் சாப்பிடக் கூடாது. ஏனென்றால் எளிதாக செரிக்காது. இது பெரும்பாலானவர்களால் விரும்பி உண்ணப்படுவது.
உளுந்து, கருப்பட்டி, செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் ஆகியவற்றால் இது தயாரிக்கப்படுகிறது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் உண்ணுவதற்கு உகந்த சத்தான இனிப்பு உணவு இது. இதை நீங்களே வீட்டில் தயாரித்து உண்ணலாம்
ulutham kali seimurai,ulutham kali cooking tips in tamil,ulutham kali samayal kurippu,ulutham kali seivathu eppadi,ulutham kali recipe i
ulutham kali seivathu eppadi
 • மாவு தயாரிக்க:
 • உளுந்து — 1 கப் (பொன்னிறமாக வறுத்தது)
 • பச்சரிசி — 3 கப்
 • களி செய்ய:
 • அரைத்த மாவு — 1 கப்
 • வெல்லம் / கருப்பட்டி — 1 என்னம் (3/4 பாகம் போதும்)
 • நல்லெண்ணைய் — தேவையான அளவு
 • மாவு தயாரிக்க:
 • உளுந்து மற்றும் அரிசியை நன்றாக அரைத்துக் கொள்ளவும். அரவை மில்லிலோ,குறைந்த அளவு என்றால் மிக்ஸியிலோ அரைக்கவும்… (தண்ணீரின்றி)
 • களி செய்ய:
 • மாவை நன்றாக தண்ணீராக கரைத்துக் கொள்ளவும்.
 • வெல்லத்தை நன்றாக தட்டிக் கொள்ளவும்.
 • அடிகனமான பாத்திரத்தில் கரைத்த மாவை கொட்டி நன்றாக கிளறவும்.
 • நன்றாக வெந்து வரும் சமயம் வெல்லத்தை போட்டு நன்கு பச்சை வாசனை போகும் வரை கட்டியில்லாமல் கிளறவும்.
 • பரிமாறும் சமயம் 1 ஸ்பூன் நல்லெண்ணைய் ஊற்றி பரிமாறவும்.
 • ரெடி.
 • இது பெண்கள் வயதுக்கு வந்த சமயம் தருவார்கள்.
 • இடுப்பு வலி, மாதவிடாய் சமயத்தில் சாப்பிட்டால் பிற்காலத்தில் வலி ஏற்படாமல் பிரச்சினை குறைவாக இருக்கும்

 

 

Loading...
Categories: arokiya unavu in tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சிற்றுண்டி

Leave a Reply


Sponsors