வாயு தொல்லையா|vaayu thollai neenga Maruthuva Kurippugal in Tamil

மனிதனால் உடலில் அடக்கவே முடியாது என்று சொல்லக்கூடிய சில விஷயங்கள் இருக்கின்றன. இதில் வாயு தொல்லைக்கு பிரதான இடம் உண்டு. பொது இடங்கள், பெரிய மனிதர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது இது வந்து சங்கடப்படுத்தும். இதுதான் வாயுத் தொல்லை என்பது.

சிலர் குனிய முடியாமல், நிமிர முடியாமல் கஷ்டப்படுவார்கள்.

என்னவென்று கேட்டால் வாய்வு பிடிப்பு என்பார்கள். வாய்வுப்பிடிப்பு, உடலில் எங்கு வேண்டுமானாலும் வரும் என்ற குருட்டுத்தனமான நம்பிக்கை நம்மிடையே உண்டு. உண்மையில் உடலில் சுவாசப் பை, உணவுப்பாதை என்ற இந்த இரண்டில் மட்டுமே காற்று இருக்கிறது. இதைத்தவிர உடலில் வேறு எங்கும் எந்த பாகத்துக்கும் காற்று போகாது. போகவும் முடியாது.

 

vaayu thollai neenga   Maruthuva Kurippugal in Tamil

அப்படி ஒரு வேளை போவதாக வைத்துக்கொண்டால், உணவுப்பாதையை ஓட்டை போட்டு சென்றாலும், வேறு எங்கும் போக முடியாது. போனாலும், உடலின் உள்உறுப்புகளான இதயம், சுவாசப் பை ஆகியவற்றைதான் அழுத்தும். இது மரணத்தில் முடியக்கூட வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இதுபோன்ற நிலை எப்போது ஏற்படும் என்றால் குண்டடிபடுவதன் மூலம் மட்டுமே உண்டாகும்.

மற்றபடி ஆரோக்கியமான உடலில் வாய்வு பிடிப்பு என்பதெல்லாம் அறியாமை தான்!

வாயு பற்றி நமக்கு இருக்கும் அறிவு மிகமிகக் குறைவே. அதனால் தான் தலைவலி, கைகால் சுளுக்கு என்று எந்த தொந்தரவு ஏற்பட்டாலும் வாயு மீது பழிபோட்டு வருகிறோம். நமது மூச்சு, நேராக சுவாசப் பைக்கு போகிறது. அது ஒரு தனிப்பாதை.

அதற்கும் வயிற்றுக்கும் நேரடி தொடர்பு எதுவும் இல்லை. அப்படி இருக்கையில் உணவுப்பாதைக்குள் காற்று எப்படி வருகிறது? இதற்கு இரண்டு காரணங்களை மருத்துவர்கள் சொல்கிறார்கள். ஒன்று நாம் சாப்பிடும்போதே உணவோடு சேர்ந்து காற்றும் உணவு பாதைக்குள் செல்கிறது. இரண்டாவது, இரைப் பைக்குள் போய் விழும் உணவை அமிலங்கள் தாக்கும்போது, அங்கே பல ரசாயன மாற்றங்கள் நிகழ்ந்து ஹைட்ரஜன், சல்பைட், மீத்தேன், கரியமில வாயு போன்ற வாயுக்களை உண்டாக்குகின்றன.

இப்படி உண்டான வாயுக்கள் இரைப் பையை கடந்து சிறுகுடல், பெருங்குடல் வழியாக ஆசன வாயில் வெளியேறுகின்றன. இது பொது இடத்தில் வெளியேறும் போதுதான் எல்லோருக்கும் சங்கடம். மற்றபடி இந்த தனிமனித முயற்சியில், நினைத்தபோது வெளியேற்றவோ, வெளியேறும் வாயுவை தடுக்கவோ முடியாது.

வயதானால் வாயு வெளியேற்றமும் அதிகமாகுமா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதற்கு அடிப்படை காரணம் உடற்பயிற்சி இல்லாததுதான். வயதானவர்கள் ஒரே இடத்தில் உட்கார்ந்தே இருக்கிறார்கள். உடல் உழைப்பு இல்லை.

இளைஞர்கள் வேலைக்குப் போவது, பஸ்சை பிடிப்பது என்று எப்போதுமே ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

அதனால் அவர்களுக்கு வாயு தொந்தரவு இல்லை. இவர்களும் உடல் உழைப்பை குறைத்தால் வாயு தொந்தரவால் அவதிப்படுவார்கள்.

பொதுவாக வாயு அதிகமாக அடிக்கடி வெளியேறுகிறது என்பவர்கள் உடற்பயிற்சி செய்ய ஆரம்பியுங்கள். ஒரு மாதத்தில் வாயு இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும்.

Loading...
Categories: Maruthuva Kurippugal in Tamil

Leave a Reply


Sponsors