வெஜிடேபிள் சமோசா | vegetables samosa cooking tips in tamil samayal kurippu

உள்ளே வைப்பதற்கு…. உருளைக்கிழங்கு – 3-4 (வேக வைத்து, தோலுரித்து, மசித்தது) பன்னீர் – 50 கிராம் (சிறிதாக வெட்டியது) குடைமிளகாய் – 1/2 கப் (நறுக்கி, வேக வைத்தது) பச்சை பட்டாணி – 1/2 கப் (வேக வைத்தது) மிளகாய் தூள் – 3 டீஸ்பூன் கரம் மசாலா – 1 டீஸ்பூன் மாங்காய் தூள் – 1/2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு மாவிற்கு…. மைதா – 2 கப் எண்ணெய் – 3 கப் உப்பு – 1 சிட்டிகை தண்ணீர் – 2 கப்

 

vegetables samos

 

 

செய்முறை: ஒரு பெரிய பௌலில் மைதா, உப்பு, எண்ணெய் சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு, சப்பாத்தி மாவு போல் மென்மையாக பிசைந்துக் கொள்ள வேண்டும். பின் அதனை ஒரு ஈரமான துணியால் மூடி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர் ஒரு பௌலில் பன்னீர், உருளைக்கிழங்கு, குடைமிளகாய், மற்றும் பச்சை பட்டாணி போட்டு, நன்கு அனைத்தையும் ஒன்றாக மசித்துக் கொள்ள வேண்டும். பின்பு அதில் உப்பு, கரம் மசாலா, மிளகாய் தூள் மற்றும் மாங்காய் தூள் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். அடுத்து ஊற வைத்துள்ள மைதா மாவை, சிறு உருண்டைகளாக உருட்டி, ஒரு பாலிதீன் பேப்பரில் எண்ணெய் தடவி, அதில் அந்த உருண்டையை வைத்து அரைவட்டமாக தேய்த்து, பின் அதனை கூம்பு வடிவில் செய்து, அதன் நடுவே, பிசைந்து வைத்துள்ள உருளைக்கிழங்கு கலவையை வைத்து மூடி, ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். இதேப்போல் அனைத்து மாவையும் செய்ய வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், அந்த சமோசாக்களை ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான வெஜிடேபிள் சமோசா ரெடி!!! இதனை தக்காளி சாஸ் உடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்

Loading...
Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சிற்றுண்டி, சைவம்

Leave a Reply


Sponsors