வேர்க்கடலைச் சட்னி|verkadalai chutney samayal kurippu in tamil

வேண்டியவை—–ஒருகப் வேர்க்கடலை,  வெறும் வாணலியில்    வறுத்துத் தோல் நீக்கிக கொள்ளவும். மற்றும்

தனியா விதை     ஒரு டீஸ்பூன்,—-ஒரு சிறிய துண்டு இஞ்சி

வற்றல் மிளகாய் 3,—தேங்காய்த்    துருவல் அரைகப்,

புளி, சின்ன எலுமிச்சை அளவு,–ருசிக்கு உப்பு

புதினா அல்லது கறிவேப்பிலை இலைகள் அரைகப்.

verkadalai chutney seimurai,verkadalai chutney cooking tips in tamil,verkadalai chutney samayal kurippu,verkadalai chutney seivathu eppadi,verkadalai chutney recipe in tamil

 

எண்ணெய்  நான்கு டீஸ்பூன்,    தாளிக்க தலா கடுகு, உளுத்தம் பருப்பு, அரை டீஸ்பூன்.

புளிக்கு பதில்  வேண்டிய அளவு தக்காளிப்பழமும் வதக்கி உபயோகிக்கலாம்.

செய்முறை—-புளியை ஊற வைத்து கெட்டியாகசாறை எடுத்துக் கொள்ளவும்.

தனியா, மிளகாய்,இஞ்சியை எண்ணெயில் வறுத்துக் கொண்டு

புதினாவையும்      சேர்த்து இறக்கவும். வறுத்து தோல் நீக்கிய

வேர்க்கடலையுடன் புளி நீர், தேங்காய், வறுத்த சாமான்கள், உப்பு சேர்த்து  மிக்ஸியில் கெட்டியாக அரைத்தெடுத்து எண்ணெயில் தாளித்துக் கொட்டவும்.  அரை டீஸ்பூன்  வெல்லமும் சேர்க்கலாம்.

வேண்டிய சுவைக்கேற்ப  வெங்காயம், பூண்டு, என  பிடித்த ருசிக்கேற்றவாறு சாமான்களை மாற்றிப் போட்டு   ஜமாய்க்கலாம். புளிப்பு காரமும், எப்படி  வேண்டுமோ அப்படி மாற்றலாம்.

Loading...
Categories: arokiya unavu in tamil, Chutney Recipes Tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors