Archive for July, 2016

தேவையான பொருட்கள்: கட்லா மீன் துண்டுகள் – 1/2 கிலோ வெங்காயம் – பாதி அளவு மிளகாய்தூள் – அரை டீஸ்பூன் புன்னை இலை – பாதி அளவு மிளகு – 3 அல்லது 4 தனியாத்தூள் – 1/2 டீஸ்பூன் எண்ணை – தேவைக்கேற்ப உப்பு – ருசிக்கேற்ப செய்முறை: கட்லா மீன் துண்டுகளை சுத்தம் செய்து சூடான எண்ணையில் பொரித்து வைக்கவும். வாணலியில் எண்ணையைச் சூடாக்கி நறுக்கிய   Read More ...

ஒவ்வொரு மனிதருக்கும் தங்கள் உடலை கட்டுடலாக, ஒல்லியாக மற்றும் கவர்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்பதே விருப்பமாக இருக்கும். இந்த கட்டுடலைப் பெறுவதற்காக பட்டினியும் கிடப்போம், விதவிதமான உணவுகளையும் சாப்பிட முயற்சி செய்வோம். நாம் எதை சாப்பிட்டாலும், அது நமது உடலில் கொழுப்பாக இருந்து வேலை செய்யும் என்பதே உண்மை. எனவே, நம் உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்கவும் மற்றும் எடையை குறைக்கவும் நாம் செய்ய வேண்டிய ஒரு ஸ்பெஷல் உணவு   Read More ...

கோப்பியில் பொதுவாகக் காணப்படும் ரசாயனம் ஒன்று உடல் எடை கூடுவதைத் தடுப்பதுடன், உடல் பருமன் தொடர்பான நோய்களையும் எதிர்ப்பதாக புதிய ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. அந்த ரசாயனம் குளோரோஜெனிக் அமிலம் ஆகும். இது இன்சுலின் தடுப்பைக் குறைப்பதோடு, லிவர்களில் கொழுப்பு சேர்வதையும் தடுப்பதாக எலிகளிடத்தில் மேற்கொண்ட பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக இவ்வாய்வில் தெரிய வந்துள்ளது. குளோரோஜெனிக் அமிலம் அழற்சியையும் குறைப்பதாக இந்த ஆய்வின் தலைவர் யாங்ஜி மா என்பவர் தெரிவித்துள்ளார். உடல்பருமனின்   Read More ...

தேவையான பொருட்கள் கத்தரிக்காய் – 2 முருங்கைகாய் – 2 அவரைக்காய் – 3 பச்சை மிளகாய் – 8 துவரம் பருப்பு – அரை கப் சின்ன வெங்காயம் – 12 பெரிய வெங்காயம் – பாதி தேங்காய் பூ – 3/4 கப் புளி – நெல்லிக்காய் அளவு சீரகம் – ஒரு தேக்கரண்டி கடுகு – அரை தேக்கரண்டி உளுத்தம் பருப்பு – ஒரு தேக்கரண்டி   Read More ...

கர்ப்பமானது பல வகையான அனுபவங்களையும், மாற்றங்களையும் தருகிறது. இம் மாற்றங்கள் உடல் சார்ந்த, மனநிலை சார்ந்த, உணர்ச்சி சார்ந்த மாற்றங்களாக இருக்கலாம். பெரும்பாலான கர்ப்பிணிப் பெண்கள் இவ்வகையான மாற்றங்களை காலையில் அனுபவிக்க நேரிடுகிறது. சிலர் இது பற்றி கூறுகையில் வாந்தி, குமட்டல், மயக்கம் போன்றன கையாளக்கூடியதாக இருப்பதாக சொல்கிறார்கள். எனினும் சில வகையான உணவுப் பொருட்கள் இவ் வகையான தாக்கத்திலிருந்து பாதுகாக்கின்றன. தேசிக்காய் சில துளி தேசிக்காயை நீருடன் கலந்து   Read More ...

Categories: Pregnancy Tips Tamil

மஞ்சள் காமாலை உருவாக காரணம் மற்றும் தீர்வு !!! பொதுவாக மஞ்சள் காமாலை நோய்த் தொற்றானது பித்த அதிகரிப்பால் வருகிறது. பித்தமானது பல காரணங்களால் மிகுதியாகி ரத்தத்தில் கலந்து விடுவதால் மஞ்சள் காமாலை நோய் ஏற்படுகிறது. உடல் உஷ்ணத்தாலும், இரவில் கண்விழித்து வேலை பார்ப்பதாலும் தூக்கமின்மையாலும் வயிற்றில் புளிப்புத்தன்மை ஏற்பட்டு சளி பிடித்து, ரத்தம் சூடேறி, காமாலைக் கிருமிகள் உண்டாகி, மஞ்சள் காமாலை நோயைத்தோற்றுவிக்கிறது. இந்த பித்தமானது நஞ்சுபோல் உடலில்   Read More ...

மனிதனின் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களையும் கொடுப்பதில் காய்கறிகளின் பங்கு அளப்பறியது. காய்கள் அனைத்துமே எளிதில் செரிக்கும் தன்மை கொண்டவை. நம் கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிலும் தோட்டப்பயிராக காய்கறிகளைப் பயிர்செய்து பயன்படுத்தி வந்தனர். அவற்றில் ஒன்றான சுரைக்காய் பற்றி தெரிந்துகொள்வோம். சுரைக்காயை பல இடங்களில் வீடுகளின் கூரைமேல் படர விட்டிருப்பார்கள். அது வெள்ளை நிறப் பூக்களையும், பெரிய குடுவை போன்ற காயையும் கொண்டிருக்கும். சுரையின் இலை, கொடி, காய்,   Read More ...

வாழை‌த் த‌ண்டி‌ன் சாறு பல நோ‌ய்களு‌க்கு மக‌த்தான மரு‌ந்தாக இரு‌ப்பது நா‌ம் பலரு‌க்கு‌ம் தெ‌ரியு‌ம். ஆனா‌ல் நம‌க்கு‌த் தெ‌ரியாத பல மக‌த்துவ‌‌ங்களை‌க் கொ‌ண்டிரு‌க்‌கிறது வாழை‌த் த‌ண்டு. பொதுவாக நா‌ம் வாழைத் தண்டை பொரியல், 8கூட்டு, சாம்பாராகச் செய்து சாப்பிடுவது வழ‌க்க‌ம். ‌சிறு‌நீரக‌க் க‌ற்க‌ளை‌க் கறை‌க்க வாழை‌த் த‌ண்டு சாறெடு‌த்து அரு‌ந்துவா‌ர்க‌ள். வாழை‌த் த‌ண்டு நா‌ர்‌ச‌த்து ‌மி‌க்கது. வாழைத் தண்டு குடலில் சிக்கிய மணல் கற்களை விடுவிக்கும் ஆ‌ற்ற‌ல் கொ‌ண்டது. ச‌ரியாக   Read More ...

எங்கும் எளிதாகக் கிடைக்கும் அரளிச்செடி! அதிக முயற்சி ஏதும் இல்லாமலேயே பல்கிப் பெருகும் இயல்புடையது. இதனுடைய இலையையோ, வேரையோ யாரும் மருத்துவ நோக்கில் யாரும் பயன்படுத்த மாட்டார்கள், பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் அவை கடுமையான நச்சுத்தன்மை வாய்ந்தவை. அரளிச்செடியின் மலரை மட்டுமே அதுவும் வெளிப் பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். அரளிப் பூவை அரைத்துக் கந்தகத்துடன் கலந்து தொடர்ந்து தடவி வந்தால் கிரந்தி, குழிப்புண், குஷ்டம் போன்றவற்றை விரைவில் குணமாகும்.       Read More ...

அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரை யீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது. அத்திப் பழத்தைத் தின்பதால் வெட்டையின் ஆணிவேர் அற்றுப்போகிறது. கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயையும் வராமல் தடுக்கிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது 1.தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும், 2 மலச்சிக்கலை   Read More ...

கடினமான செருப்பு அணிவதால் கால் வெடிப்புகள் வரும். சிலருக்கு சோப்பில் உள்ள கெமிக்கல் ஒவ்வாமையினால் ஒரு சிலருக்கு வெடிப்பு உண்டாகும். சிலர் பாதங்களை சுத்தமாக வைத்து கொள்வது இல்லை.இதனாலும் கால் வெடிப்புகள் வரும். கால் வெடிப்பு நீங்க சில எளிய வழிகள் இதோ: வேப்பிலையில் மஞ்சள் சேர்த்து அரைத்து பூசினால் குணமாகும். நீங்கள் தினமும் சொரசொரப்பான கல்லில் காலை வைத்து தேய்த்தாலும் கால் வெடிப்பு மறையும். கால் வெடிப்பிற்கு எலுமிச்சைச்   Read More ...

தலைவலி, பல்வலி போல பலரையும் பரவலாக தாக்கக்கூடிய ஒரு பிரச்சினையாக சிறுநீரகக்கல், இன்றைக்கு உருவெடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த நோய் வருவதற்கான அறிகுறிகள், பின்னணி, சிகிச்சைகள், தவிர்க்கும் முறைகள் பற்றி பிரபல சிறுநீரகவியல் மருத்துவர்கள் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றுவதன் மூலம் தப்பித்துக் கொள்ளலாம். சிறுநீரகத்தில், சிறுநீரில் உள்ள கிரிஸ்டல் எனப்படுகிற உப்புகள் (கால்சியம், ஆக்சலேட், யூரிக் அமிலம் ஆகியவை) ஒன்றுதிரண்டு, சிறுநீர்ப் பாதையில் பல்வேறு அளவுள்ள கற்களை உருவாக்கலாம். சிறுநீரானது சிறுநீரகத்தில் உற்பத்தியாகி,   Read More ...

Sponsors