அகத்திக்கீரை கூட்டு|agathi keerai kootu in tamil

தேவையான பொருட்கள்:

அகத்திக்கீரை – 1 கட்டு
பாசிப்பருப்பு – 50 கிராம்
துருவிய தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் – 3
கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

 

agathi keerai kootu in tamil

செய்முறை:

முதலில் பாசிப்பருப்பை நீரில் 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும். பின் அதில் கீரையை போட்டு நன்கு கிளறி, பின் ஊற வைத்துள்ள பாசிப்பருப்பை கழுவிப் போட்டு நன்கு பிரட்டி விட வேண்டும். பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் தெளித்து, மூடி வைத்து வேக வைக்க வேண்டும். கீரையானது நன்கு வெந்த பின், அதில் உப்பு மற்றும் துருவிய தேங்காயை சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், அகத்திக்கீரை கூட்டு ரெடி!!

Loading...
Categories: arokiya unavu in tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors