பேபி இட்லி,baby idli recipe in tamil ,baby idli samayal,baby idli seivathu eppdi

தேவையான பொருட்கள்:-

பேபி இட்லி – 50 (ஒரு ரூபாய் நாணயம் அளவு)
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – சிட்டிகை
பெருங்காயத் தூள் – 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2 பெரியது
உப்பு – தேவையான அளவு
கறிபேப்பிலை, மல்லித் தழை, கடுகு, சீரகம், எண்ணெய் தாளிக்க.

 

பேபி இட்லி,baby idli recipe in tamil ,baby idli  samayal,baby idli  seivathu eppdi
செய்முறை:-

முதலில் அடுப்பில் கடாய் வைத்து, எண்ணெய் விட்டு, அதில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்க்கவும். பிறகு அதில் மஞ்சள், மிளகாய்த் தூள் சேர்க்கவும். பிறகு மெலிதாகக் கீறிய பச்சை மிளகாய், பெருங்காயத்தூள் சேர்க்கவும். நன்றாகப் பொரிந்த வாசனை வந்தபின் பேபி இட்லிகளை மெல்ல சேர்க்கவும். கேஸ் அடுப்பை “சிம்மில்” வைக்கவும் நன்றாக மிக்ஸ் செய்து இறக்கி கொத்துமல்லி இலை சேர்க்கவும். இதில் கொஞ்சம் எண்ணெய் அதிகம் சேர்த்தால் சுவை கூடும். (அதாவது தாளிப்பதை விட கொஞ்சம் அதிக எண்ணெய்).

பின் குறிப்பு:- இது இங்கு மும்பையில் ரொம்பப் பிரசித்தம். குஜராத்தியில் இதை இவ்வாறு செய்து கடைகளில் அழகாக பேக் செய்து விற்கிறார்கள். இதே இட்லிகளை வேறு வகையாகவும் செய்கிறார்கள்

Loading...
Categories: idli Vagaigal In Tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சிற்றுண்டி, சைவம்

Leave a Reply


Sponsors