இளநீர் ரவை ஸ்மூத்தி|coconut rava smoothie recipe in tamil cooking tips

ரவை – 1/2 கப்,
துவரம்பருப்பு – 2 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்,
மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்,
சீரகம் – 1 டீஸ்பூன், கடுகு – 1/4 டீஸ்பூன்,
வெங்காயம் – 2 டீஸ்பூன் (பொடியாக அரிந்து கொள்ளவும்),
தக்காளி – 1 (பொடியாக அரிந்து கொள்ளவும்),
கலப்புக் காய்கறிகள் – 3/4 கப் (பொடியாக அரிந்து கொள்ளவும்),
புதினா – 1 கைப்பிடி (பொடியாக அரிந்து கொள்ளவும்),
கறிவேப்பிலை- 10 (பொடியாக அரிந்து கொள்ளவும்),
இளநீர் – ஒன்றரை கப்,
இளநீர் வழுக்கை – 2 டீஸ்பூன்,
தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்.

coconut rava smoothie recipe in tamil cooking tips

இளநீரில் தண்ணீர் மற்றும் வழுக்கையை எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். தேங்காய் எண்ணெயை பிரஷர் பானில் சூடாக்கவும். கடுகு, சீரகம் சேர்த்து கடுகு வெடிக்கும் வரை வதக்கவும். பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். தக்காளி சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்கவும். காய்கறிகளை சேர்த்து வதக்கவும். உப்பு, மஞ்சள்தூள், பொடியாக அரிந்த புதினா இலை, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். துவரம்பருப்பு, ரவை சேர்த்து வதக்கவும். 2 கப் தண்ணீர் சேர்த்து உப்பை சரிபார்க்கவும். 4 விசில் வரும் வரை வேக வைக்கவும். சத்தம் அடங்கியவுடன் மூடியை திறந்து மிளகு, இளநீர் மற்றும் இளநீர் வழுக்கை சேர்த்துக் கொதிக்க விடவும். சூடாகப் பரிமாறவும்.

Loading...
Categories: arokiya unavu in tamil, Saiva samyal, சிற்றுண்டி, சைவம்

Leave a Reply


Sponsors