இளநீர் ஆப்பம்|elaneer appam tamil samayal kurippu,cooking tips in tamil

பச்சரிசி – 1 கப்
புழுங்கல் அரிசி – 1 கப்
உளுந்து  – கால் கப்
இளநீர் – 1 கப்
ஈஸ்ட் – ஒரு ஸ்பூன்
பால் – சிறிதளவு,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

 

முதலில் பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுந்து  சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு இதனுடன் இளநீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் அரைத்து, உப்பு சேர்த்துக் கரைக்கவும். ஆப்பம் சுடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு ஈஸ்ட்டை மிதமான பாலில் கலந்து, பத்து நிமிடம் கழித்து மாவுக் கலவையில் சேர்க்கவும். பின்னர், ஆப்பச்சட்டியில் எண்ணெய் விட்டு ஆப்பங்களாக சுட்டு எடுக்கவும். சுவையான இளநீர் ஆப்பம் ரெடி.

Loading...
Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சிற்றுண்டி, சைவம்

Leave a Reply


Sponsors