கடுகு – மருத்துவ பயன்கள்|kadugu Maruthuva Kurippugal in Tamil

மருத்துவ குணங்கள் நிறைந்த கடுகு

 

கடுகு சிறுத்தாலும்… காரம் குறையாது!’ காரம் மட்டுமில்லீங்க… அதுல மருத்துவ குணங்களுக்கும் குறைவில்லை. அதனாலதான், நம்மோட பெரும்பாலான சமையல்லயும் அதுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்காங்க. எந்த சமையலா இருந்தாலும், அதைத் தாளிக்கறதுக்கு கடுகை பயன்படுத்தறத பழக்கப்படுத்திட்டு போயிருக்காங்களே… புண்ணியவானுங்க அதைத்தான் பெருமையோட சொல்றேன்!

கை-கால் வலி, மூட்டுவலி, வாயு பிடிப்பு, அடிபட்டு ரத்தம் கட்டுதல்னு பலவித பிரச்னைகளுக்கும் கடுகு நல்ல பலன் கொடுக்கும். பாதிக்கப்பட்ட இடத்துல பூசுறதுக்கு தேவையான அளவு கடுகை எடுத்து, தண்ணி விட்டு அரைச்சுக்கங்க. பிறகு, அதை லேசா சூடு காட்டி பத்து போட்டா… கை-கால் வலியில இருந்து எல்லா பிரச்னைகளும் சரியாகும். தேவைப்பட்டா… கொஞ்சம் பெருங்காயமும் சேர்த்துக்கிடலாம்.

மேல சொன்ன பிரச்னைகளுக்கே… இன்னொருவிதமான கடுகு வைத்தியமும் கைவசம் இருக்கு. அதாவது… 10 கிராம் முருங்கைப்பட்டை, பெருங்காயம் ஒரு புளியங்கொட்டை அளவு, கடுகு ஒரு ஸ்பூன் எடுத்து தண்ணி விட்டு மையா அரைக்கணும். பிறகு, அதை கொதிக்க வெச்சு பொறுக்குற சூட்டுல பத்து போட்டா… எல்லா வலிகளும் பறந்துரும். ஒருநாளைக்கு ஒருவேளை வீதம், மூணு நாளைக்கு இப்படி பூசிட்டு வந்தா… நல்ல குணம் கிடைக்கும்.

சிலர் தொடர்ந்து இருமிக்கிட்டே இருப்பாங்க. இதுக்கு கடுகை பொடியாக்கி, அரை கிராம் அளவு எடுத்து தேன் சேர்த்து காலை, மாலைனு 2 நாள் சாப்பிட்டு வந்தா… கட்டாயம் பலன் கிடைக்கும்.

 

kadukuu ,kadugu Maruthuva Kurippugal in Tamil

 

விக்கல் நீங்க வெந்நீர் – 130 மி.லி. எடுத்து அதில் கடுகுத்தூள் – 8 கிராம் ஊறவைத்து வடிகட்டி அருந்தினால் விக்கல் நீங்கும். விஷம் வெளியேறும், பூச்சி மருந்து, தூக்க மாத்திரை போன்றவற்றை சாப்பிட்டவர்களுக்கு, 2 கிராம் கடுகு நீர் விட்டு அைத்து நீரில் கலக்கி உட்கொள்ளக் கொடுத்தால் உடனடியாக வாந்தி எடுக்க விஷம் வெளியேறும்… தேனில் கடுகை அரைத்து உட்கொள்ளக் கொடுக்க இருமல்,

 

கபம், ஆஸ்துமா குணமாக்கும். கடுகை தூள் செய்து வெந்நீரீல் ஊற வைத்து வடித்து கொடுக்கவிக்கலை குணப்படுத்தும் கடுகை அரைத்து பற்றிடரத்தக்கட்டு, மூட்டு வலி தணியும் கை, கால்கள் சில்லிட்டு விரைத்துக் காணப்பட்டால் கடுகை அரைத்து துணியில் தடவி கை, கால்களில் சுற்றி வைக்க வெப்பத்தை உண்டாக்கும் உடனடியாக விரைப்பு சீராகும். கடுகு, மஞ்சள் சம அளவு எடுத்து நல்லெண்ணெயில் காய்ச்சி வடிகட்டிக் காதில் சில சொட்டுகள் இட தலைவலிக்கு நிவாரணம் கிட்டும்…

Loading...
Categories: Maruthuva Kurippugal in Tamil

Leave a Reply


Sponsors