கர்ப்பகால தலைவலி நிவாரணம்|karpa kala thalai vali neenga tips in tamil

கர்ப்பமாக இருக்கும் போது, உடலில் நிறைய வலிகள் ஏற்படும். அவற்றில் ஒன்று தான் தலைவலி. இத்தகைய நிலையில் வரும் தலைவலிகள் மிகவும் தீவிரமாக இல்லாவிட்டாலும், அது மிகவும் தொந்தரவு கொடுப்பவையாகவே இருக்கும். இப்போது இந்த தலைவலி ஏற்படுவதற்கு காரணத்தையும், அதனை எப்படி குணப்படுத்துவது என்பதையும் பார்க்கலாம்..

– அதிகப்படியான வேலைப்பளுவினால் சிலருக்கு தலைவலி ஏற்படும். கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் உண்டாகும் பிரச்சனைகளை சந்திக்கும் போது ஏற்படும் டென்சனால், தலைவலி அதிகரிக்கும். அந்த சமயங்களில் மனதை அமைதிப்படுத்தும் செயல்களான யோகா மற்றும் தியானம் போன்றவற்றை செய்வது நல்லது.

Pregnant woman, mid section

Pregnant woman, mid section

 

– கர்ப்பத்தின் போது ஹார்மோன் மாற்றங்கள் நிகழும். அவ்வாறு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களாலும், சிலருக்கு தலைவலி உண்டாகும். இந்த சமயங்களில் நல்ல சுத்தமான காற்றை சுவாசிப்பது மற்றும் மனதை புத்துணர்ச்சியூட்டும் சாக்லெட்டை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

– கர்ப்பமாக இருக்கும் போது, சரியாக சாப்பிட முடியாமலும், வேலை செய்ய முடியாமலும் இருக்கும். அவ்வாறு இருந்தால், உடலுக்கு வேண்டிய சக்தியானது கிடைக்காது. இதனால் ஒருவித தலைவலி ஏற்படும். அவ்வாறு ஏற்பட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது என்றும், அந்த நேரத்தில் ஏதேனும் ஜூஸ் குடிக்க வேண்டும் என்றும் அர்த்தம்.

Loading...
Categories: Pregnancy Tips Tamil

Leave a Reply


Sponsors