கர்ப்பிணி பெண்களுக்கு பசியை அதிகரிக்க சில வழிகள்|karpini pengal sapida tips in tamil

பசி குறைதல் என்பது கர்ப்பிணி பெண்களுக்கு, கர்ப்ப காலத்தில் ஏற்படும் பொதுவான பிரச்சனையே. ஆனால் இதை கவனிக்காமல் விட்டு விட இது ஒன்றும் சாதாரண பிரச்சனை இல்லை. கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் பிறக்க போகும் குழந்தையின் வளர்ச்சிக்காக அதிக அளவிலான உணவவை பெண்கள் உட்கொள்ள வேண்டும்.

இந்த பசி குறைதலுக்கு முக்கிய காரணமே உடலில் திடீரென ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களே. கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் பசியை அதிகரிக்க போதிய முயற்சிகளை எடுக்க வேண்டியது முக்கியமாகும். இது உங்கள் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்லாது உங்கள் வயிற்றில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்துக்கும் முக்கியமாகும்.

அதற்காக என்ன வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்றும் அர்த்தமில்லை. ஆரோக்கியமாக சாப்பிடுவதே முக்கியம். நீங்கள் உண்ணும் உணவில் இருந்து தான் உங்கள் வயிற்றில் இருக்கும் சிசுவிற்கு போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். அதனால் கர்ப்பமாக இருக்கும் காலத்தில் ஆரோக்கியமாக உண்ணுவது மிகவும் முக்கியம். இந்நேரத்தில் சரிசமமான உணவு பழக்கத்தை மேற்கொண்டால் தான் வயிற்றில் வளரும் குழந்தை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆரோக்கியமான வளர்ச்சியை அடையும்.

 

preganent_food_ in tamil,karpini pengal sapida tips in tamil

கர்ப்பம் தரித்த முதல் மூன்று மாதத்தில் உங்கள் பசி குறைவது இயல்பு தான். குமட்டல், வாந்தி மற்றும் இதர உடல் சுகவீனங்களே அதற்கு காரணமாகும். ஆனால் இவைகளிலிருந்து நீங்கள் விடுபட ஆரம்பித்தவுடன், உங்கள் பசி இயற்கையாகவே அதிகரிக்க வேண்டும். அப்படி நடக்கவில்லை என்றால், உங்கள் பசியை அதிகரிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது முக்கியமாகும். கர்ப்ப காலத்தில் உங்கள் பசியை அதிகரிக்க உங்களுக்காக சில டிப்ஸ்,

உடற்பயிற்சி கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சியில் ஈடுபட்டால் உங்கள் உடலுக்கு நன்மையை தருவதோடு உங்கள் பசியையும் அதிகரிக்கும். கர்ப்ப காலத்தில் உங்களுக்கு உடல் ரீதியான பிரச்சனை ஏற்பட்டு ஓய்வில் இருக்கும் சந்தர்ப்பம் ஏற்படலாம். அதனால் உடற்பயிற்சிக்கு செய்வதற்கு முன்பு உங்கள் மருத்துவரை அணுகி உடல் ரீதியாக உங்களால் அதனை மேற்கொள்ள முடியுமா என்பதை கலந்தாலோசித்துக் கொள்ளுங்கள்.

உண்ணுங்கள் உங்கள் மனப்பான்மையினாலேயே உங்களுக்கு பசி குறைதல் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. கர்ப்பமாக இருக்கும் காலத்தில் உணவுகளின் மீது தீராத நாட்டம் இருப்பது பொதுவான ஒன்று தான். விசேஷமாக எதையாவது உண்ண வேண்டும் என்ற ஆசை வந்தால் உண்ணுங்கள். இது உங்களை திருப்தி படுத்தி கர்ப்ப காலத்தில் உங்கள் பசியையும் அதிகரிக்கும்.

சமாளிப்பது கர்ப்பிணி பெண்கள் பலருக்கும் பசியின்மை ஏற்படுவதற்கு குமட்டல் மற்றும் வாந்தியும் ஒரு முக்கிய காரணமாக விளங்குகிறது. சில பெண்களுக்கு இப்பிரச்சனை கடைசி மூன்று மாதங்கள் வரை நீடிக்கும். அதனால் உங்களுக்கு ஏற்படும் குமட்டல் மற்றும் வாந்தியை சமாளித்து பசியை அதிகரித்திடுங்கள்.

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் பசியை அதிகரிக்க யோகா பயிற்சியை மேற்கொள்ளுங்கள். பசியை அதிகரிப்பதற்காகவே பல ஆசனங்கள் உள்ளது. இருப்பினும் ஒரு சிறந்த யோகா ஆசிரியிரிடம் முறையாக சென்று இப்பயிற்சியை மேற்கொள்ள மறந்து விடாதீர்கள்.

நொறுக்குத் தீனிகள் கர்ப்பமாக இருக்கும் போது ஆரோக்கியமான உணவை உண்ணுவது ஒரு சிறந்த ஐடியாவாகும். அதனால் உங்கள் உணவில் ஆரோக்கியமான நொறுக்குத் தீனிகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இது கர்ப்ப காலத்தில் உங்கள் பசியை அதிகரிக்க உதவும். அதற்கு காரணம் இது உங்கள் செரிமான அமைப்புக்கு ஊக்குவிக்கியாக இருந்து பசியை தூண்டும்.

உணவுகளை உண்ணுங்கள் வழக்கமாக உண்ணும் உணவுகள் அலுப்பைத் தட்டினால் புதிதான ஏதாவது ஒன்றை முயற்சி செய்து பாருங்கள். உணவு ருசி மற்றும் வகை ஆகியவற்றில் மாற்றத்தை கொண்டு வந்தால் கண்டிப்பாக உங்கள் பசி அதிகரிக்கும். இருப்பினும் கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமாக உண்ண வேண்டியதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

Loading...
Categories: Pregnancy Tips Tamil

Leave a Reply


Sponsors