மீன் தலைக் கறி|meen thala curry tamil samayal kurippu

மீன் தலை – 1 கிலோ (வஞ்சிரம், கொடுவா போன்றவகை மீன்களில் பெரிய மீன்களின் தலையாக வாங்க வேண்டும்)

வெண்டைக்காய் – கால் கிலோ (முழுதாக போடவும்)

கத்திரிக்காய் -கால் கிலோ (இரண்டாக வெட்டவும்)

நாட்டுத்தக்காளி் கால் கிலோ (இரண்டாக வெட்டவும்)

சின்னவெங்காயம் – கால் கிலோ (உரித்துக்கொள்ளவும்)

புளி – 200 கிராம் (கரைக்கவும்)

மிளகாய்த்தூள் – 3 டீஸ்பூன்

மல்லித்தூள் (தனியாத்தூள்) -4 டீஸ்பூன்

மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்

எண்ணெய்- 2 குழிக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

வெல்லம் – சிறிதளவு

 

meen thala curry seimurai,meen thala curry cooking tips in tamil,meen thala curry samayal kurippu,meen thala curry seivathu eppadi,meen thala curry recipe in tamil

தாளிக்க:

கடுகு- 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, கறிவேப்பிலை- சிறிது

செய்முறை:

மீன் தலையைக் கழுவி உப்பு, மஞ்சள்தூள் தடவி ஊற விடவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி, தாளிக்கக் கொடுத்த பொருட்களைச் சேர்த்துத் தாளிக்கவும். இதில் வெண்டைக்காய், கத்திரிக்காய், தக்காளி, சின்னவெங்காயம் போட்டு வதக்கவும். இத்துடன் மல்லித்தூள், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் போட்டுக் கிளறவும். புளிக்கரைசல் இதில் ஊற்றி, கூடவே 2 கிளாஸ் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். கலவை திக்காக வரும்போது, அதில் மீனைப் போடவும். மூன்று நிமிடம் கழித்து வெல்லம் சேர்த்து இறக்கிப் பரிமாறவும். மீன் தலை 3 நிமிடம்தான் வேக வேண்டும். இட்லி, தோசை, சாதத்துக்கு அருமையான காம்பினேஷன் இந்தத் தலைக் கறி.

Loading...
Categories: Kuzhambu Recipes Tamil, Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Sponsors