முகம் வழுவழுப்பாக இருக்க|mugam valuvalupaga Azhagu Kurippugal

Loading...

நெற்றியிலும், கன்னங்களிலும் பொரிப் பொரியாக உள்ளதா?


“முதலில், இது ஏன் ஏற்படுகிறது?:-

தலை வாரும்போது நெற்றியில் சிப்பு படுதல், தலையைத் துவட்டும்போது ஏற்படும் அழுத்தம். பொடுகு, முகத்தில் அதிக முடி இருப்பது… இந்தக் காரணங்களால் நெற்றியில் முள் போன்று பொரிப்பொரியாகத் தோன்றும். இதற்கு நிரந்தரமான தீர்வு உண்டு.

ரோஜா இதழ்களை சந்தன மனையில் வைத்து இழையுங்கள். அதே அளவு சந்தனம் சேர்த்துக் குழையுங்கள். பொரி இருக்கும் இடங்களில் இதைப் போட்டு, பத்து நிமிடம் கழித்துக் கழுவுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இதைச் செய்துவந்தால் பொரிகள் மறையத் தொடங்கும்.

இதோடு கீழே உள்ள சிகிச்சையையும் தொடர்ந்து செய்யுங்கள்.

கசகசா – 2 டீஸ்பூன்
கருந்துளசி இலை – 10

 

mugam valuvalupaga Azhagu Kurippugal,Azhagu Kurippugal

இவ்விரண்டையும் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளுங்கள் கொதிநீரில் வெட்டிவேரை போட்டு வையுங்கள்.

மெல்லிய ஆர்கண்டி துணியை “ஜில்” தண்ணீரில் நனைத்து, பிழிந்து, நெற்றியில் வைத்து, அதன்மேல் இந்த விழுதை “பத்து” போல் போடுங்கள். 15 நிமிடம் கழித்து வெட்டிவேர் தண்ணீரால் கழுவுங்கள். இப்படி வாரம் ஒரு முறை செய்யுங்கள்.

இதில் சேர்க்கப்பட்டுள்ள கசகசா, “பொரிகளை” அடியோடு போக்குவதுடன், முகத்தையும் வழுவழுப்பாக்கும். துளசி, தோலின் முரட்டுத் தன்மையை நீக்கி மிருதுவாக்கும்.

இந்த சிகிச்சைகளை ஒரு மாதம் தொடர்ந்து செய்து வந்தாலே துருத்தி நிற்கும் பொரிகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். இந்த சிகிச்சையின் போது முகத்துக்கு “க்ரீம்” போடுவதைத் தவிர்ப்பது நல்லது.


கூடுதல் டிப்ஸ்:-

கூந்தலுக்கு இறுக்கமாக “க்ளிப்” போடாதீர்கள். சுத்தமான சீப்பால் நெற்றியில் படாதவாறு வாரிக் கொள்ளுங்கள். குளிர்ந்த தண்ணீரால் மட்டுமே முகம் கழுவுங்கள்.

Loading...
Loading...
Categories: Azhagu Kurippugal, Beauty Tips Tamil

Leave a Reply


Recent Recipes

Sponsors