முருங்கைக் கீரையின் பயன்கள்|murungai keerai Maruthuva Kurippugal in Tamil

முருங்கைக்கீரையின் பயன்கள்:

கிராமங்களில்
முருங்கை தின்னா முன்னூறு வராது என்று சொல்வார்கள். முருங்கை இலைகளை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்கள் 300  நோய்க ளுக்கு மேல் வராமல் பாதுகாக்கப்படுவார்கள் என் கிறது பழமொழி. முருங்கை இலை, பூக்கள், காய் என அனைத்தும் மிகச்சிறந்த  உணவுப்பொருளாகப் பயன்படுகிறது.

முருங்கை இலையை உருவி எடுத்துவிட்டு அதன் காம்புகளை நறுக்கி மிளகு ரசம் செய்து சாப்பாட்டுடன் சாப்பிடலாம்.. முருங்கை கீரையை அடிக்கடி  பொரியல் செய்து சாப்பிட பித்த மயக்கம், மலச்சிக்கல், கண்நோய் கபம், மந்தம் போன்றவை குணமாகும்.

முருங்கை இலையில் பாலாடையை விட 2 மடங்கு புரோட்டீன் இருக்கிறது. ஆரஞ்சைவிட 7 மடங்கு வைட்டமின் சி நிறைந்திருக்கிறது-.  வாழைப்பழத்தைவிட 3 மடங்கு பொட்டாசியம் இருக்கிறது. கேரட்டைவிட 4மடங்கு வைட்டமின் ஏ உள்ளது. பாலைவிட 4 மடங்கு கால்சியம் உள்ளது.  உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக் களையும் முருங்கையிலை கொண்டுள்ளது என பட்டிய லிடுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

ஏழைக்குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப் படுகிறார்கள் என அனைவரிடமும் ஒரு தவறான கருத்து நிலவுகிறது. ஆனால் நடுத்தரக்  குடும்பத்தில் உள்ள குழந்தைகள்கூட ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப் படுகிறார்கள் என்று கருத்து கணிப்பு சொல்கிறது. ஏனெனில் நாம் எடுத்துக்கொள்ளும் அன்றாட உணவில் போதுமான அளவு ஊட்டச்சத்து இருப்பதில்லை.

 

murungai keerai  Maruthuva Kurippugal in Tamil

எனவே முருங்கைக் கீரையை அடிக்கடி சமையலில் சேர்த்து சாப்பிடவேண்டும். முருங்கைக் கீரை சாப்பிடாத வர்கள் முருங்கை இலையை நிழலில்  காயவைத்து பொடி செய்து தினமும் சாம்பார் போன்றவற்றில் சேர்த்து சாப்பிட லாம். தினமும் 8 முதல் 24 கிராம் முருங்கைப்பொடி உணவில்  சேர்த்துக்கொள்ளும்போது உடல் மிக ஆரோக்கியமாக இருக்கும்.

சாதாரண வீடுகளில் காணப்படும் முருங்கை மரத்தை மருத்துவ செல்வம் என்றே சொல்லவேண்டும். ஏனெனில் முருங்கை பல நோய்களைக்  குணப்படுத்தும் சக்திகளை தன்னகத்தே கொண்டுள்ளது.

உடல் சூடு அதிகம் உள்ளவர்கள் வாரத்தில் இரண்டு முறை முருங்கைகீரை சாப்பிட்டு வர உடல் சூடு தணியும்.
முருங்கைக்கீரையின் சத்து மிகவும் அற்புதமானது. குழந்தையில்லாதவர்களுக்கு இது பெரிய வரப் பிரசாதம். மாதவிடாய் தருணத்தில் 3 நாள் வெறும் வயிற்றில் இதன் சாறை உள்ளங்கையில் ஊற்றிக் குடிக்கலாம். 3 மாதம் தொடர்ந்து செய்து வந்தால், கருப்பையில் உள்ள குறைகள் நிவர்த்தியாகும். பக்க விளைவுகள் எதுவும் கிடையாது.
கீரையை உருவிக் கிடைக்கும் குச்சி போன்ற காம்புகளை பொடியாக நறுக்கி, ‘சூப்’ போட்டு குடித்தால், அல்லது ரசம் வைத்து சாப்பிட்டு வந்தால், வாயுத் தொல்லைகள் நீங்கும். நன்றாக பசிக்கும். கைகால் பிடிப்பு விடும். மூட்டு வலிக்கு இந்த சூப் மிகவும் நல்லது .காய வைத்துப் பொடித்து தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிடலாம்.
******************
முருங்கைக்கீரையின் வித விதமான சமையல் ஐட்டங்கள்:
முருங்கைக்கீரைக் குழம்பு:
தேவையான பொருட்கள்:
முருங்கைக்கீரை -2 டம்ளர்; துவரம்பருப்பு-100 கிராம்; சாம்பார் பொடி- 2 ஸ்பூன்; புளி- நெல்லிக்காயளவு; வெங்காயம்-2; தக்காளி-2; மஞ்சள் தூள்,எண்ணெய் உப்பு.
செய்முறை:
பருப்பை வேக வைத்து, நறுக்கிய தக்காளி, வெங்காயத்துடன் உப்பு, சாம்பார் பொடி, மஞ்சள் தூள், புளி கரைசல் அனைத்தையும் சேர்த்து ஒரு கொதி வந்ததும் கீரையைப் போட்டு , 3 நிமிடம் கொதிக்க வைக்கவும். பிறகு தாளித்து, பெருங்காயம் தூவி இறக்கவும். 2,3 கொதி வந்தால் போதும். அதிகமாக அடுப்பில் விட்டு வைத்தால், கசப்பாகிவிடும். இந்தக் குழம்பு சாதத்துடன் ஊற்றி சாப்பிட சுவையானது.

முருங்கைக்கீரை சட்னி:
தேவையான பொருட்கள்:
கீரை-2 டம்ளர்; உளுத்தம் பருப்பு-4 ஸ்பூன்; கடலைப் பருப்பு-3 ஸ்பூன்; காய்ந்த மிளகாய்-5; புளி, உப்பு
செய்முறை:
கீரையைத் தவிர மற்றவைகளைப் போட்டு வேக வைத்து, கடைசியில் கீரையைக் கலந்து 2 நிமிடம் வெந்ததும், தாளித்து இறக்கவும். இந்த சட்னியை, சாதத்துடன் சாப்பிடலாம். இட்லி, தோச முதலிய டிஃபனுடனும் சேர்த்து சாப்பிடலாம்.

முருங்கைக்கீரை அடை:
தேவையான பொருட்கள்:

முருங்கைக்கீரை-2 டம்ளர்; கேழ்வரகு மாவு அல்லது கோதுமை மாவு-1 1/2 டம்ளர்; வெங்காயம்-2; மிளகாய்-5; பூண்டு-1; ஜீரகம் -1 ஸ்பூன்.

செய்முறை:
அனைத்தையும் உப்பு போட்டு பிசைந்து அடை தட்டவும். எண்ணெயில் பக்கோடா மாதிரியும் பொறிக்கலாம்.

முருங்கைக்கீரை பொரியல்:
தேவையான பொருட்கள்:
முருங்கைக்கீரை- 2 டம்ளர்; வெங்காயம்-1 வேர்க்கடலை-50 கிராம்; காய்ந்த மிளகாய்-4.
செய்முறை:
வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, வெங்காயம் போட்டு, 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கொதித்ததும், கீரையைப் போட்டு , அடுப்பை லேசாக எரிய விடவும். வேர்க்கடலை, நறுக்கிய மிளகாயை வறுத்து பொடித்து கலந்து இறக்கவும்.

மேற்கூறப்பட்ட கீரை வகை சமையல் விதங்களை செய்து சாப்பிட்டு பலனடையவும்.

Loading...
Categories: arokiya unavu in tamil, Maruthuva Kurippugal in Tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors