ஓட்ஸ் வெஜிடபிள் உப்புமா|oats veg upma recipe in tamil

தேவையான பொருட்கள்:

காரட் – 1 கப்
குடைமிளகாய் – 1 கப்
பச்சை பட்டாணி – 1 கப்
பீன்ஸ் – 1 கப்
காலி பிளவர் – 1 கப்
வெங்காயம் நீளமாக நறுக்கியது – 1 கப்
ஓட்ஸ் – 1 டீ கப்
எண்ணெய் – 2 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் – 3 டீஸ்பூன்
பச்சைமிளகாய் பொடியாக நறுக்கியது – 2 டீஸ்பூன்
கடுகு கொஞ்சம்
உப்பு தேவையான அளவு

 

oats veg upma recipe in tamil


செய்முறை:

வழக்கமாக உப்புமாவுக்கு தண்ணீர் விட்டு செய்வது போல் ஓட்ஸ் உப்புமாவுக்கு தண்ணீர் விட்டு வேக வைக்க வேண்டியதில்லை. ஒரு பெரிய டீ வடிகட்டி அல்லது சல்லடையில் ஓட்ஸைப் போட்டு அதைத் தண்ணீர் பைப்பின் அடியில் வைத்து, தண்ணீர் விட்டு லேசாக அலசி விட்டுப் போட்டாலே ஓட்ஸ் சாஃப்ட்டாகி விடும்! பாதி எண்ணெயில் கடுகு தாளித்து, நனைந்த ஓட்ஸைப் போட்டு உப்பு தூள் சேர்த்து பிரட்டவும். காய்கறிகளை தனியே கொஞ்சம் உப்பு சேர்த்து வதக்கி பிறகு ஓட்ஸ் உப்புமாவுடன் கலக்கிப் பரிமாறவும்

Loading...
Categories: arokiya unavu in tamil, Saiva samyal, சிற்றுண்டி, சைவம்

Leave a Reply


Sponsors