பாகற்காய் தொக்கு|Pagarkai Thokku seimurai,Pagarkai Thokku cooking tips in tamil,Pagarkai Thokku samayal kurippu,Pagarkai Thokku seivathu eppadi,Pagarkai Thokku recipe in tamil

பாகற்காய் – ¼ கிலோ (1 பெரிய கப்),
விருப்பமான எண்ணெய் – 2-3 டேபிள்ஸ்பூன்,
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்,
கடுகு, வெந்தயத்தூள் – ½ டீஸ்பூன்,
புளி – ஒரு எலுமிச்சை அளவு,
வறுத்து பொடித்த சீரகத்தூள் – 1 டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – ½ டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
வெல்லம் – சிறிது.

Pagarkai Thokku  seimurai,Pagarkai Thokku  cooking tips in tamil,Pagarkai Thokku  samayal kurippu,Pagarkai Thokku  seivathu eppadi,Pagarkai Thokku  recipe in tamil

பாகற்காயை சுத்தம் செய்து வட்டவட்டமாக நறுக்கி மஞ்சள்தூள் போட்டு கலந்து ஒரு நாள் முழுக்க காய விடவும். உலர்ந்ததும் கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, இத்துடன் காய்ந்த பாகற்காயைப் போட்டு வதக்கவும். அது பாதி வதங்கியதும் உப்பு சேர்க்கவும். மீண்டும் வதக்கவும். புளியை கரைத்து விழுதாக எடுத்து இத்துடன் வறுத்து பொடித்த சீரகத்தூள், மஞ்சள்தூள், வெந்தயத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து கலந்து, வதக்கிக் கொண்டு இருக்கும் பாகற்காய் கலவையில் சேர்க்கவும்.

புளியுடன் சேர்த்து மிதமான தீயில் வதக்கி எண்ணெய் பிரியும்போது ஒரு சிறு துண்டு இடித்த சுத்தமான வெல்லத்தை பொடித்து சேர்க்கவும். இவை யாவும் கலந்து தொக்கு பதம் வந்ததும் இறக்கி ஆறியதும் உலர்ந்த பாட்டிலில் நிரப்பி வைக்கவும். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இந்த தொக்கு மிக நல்லது.

Loading...
Categories: arokiya unavu in tamil, oorugai Recipes In Tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சிற்றுண்டி, சைவம்

Leave a Reply


Sponsors