ரவா புட்டிங்|rava pudding recipe in tamil cooking tips

தேவையான பொருட்கள்:

பால் – 2 லிட்டர்
முந்திரிப்பொடி – 1 கப்
சிரோட்டி ரவை – 1/2 கப்
காஸ்டர் சர்க்கரை அல்லது சுகர் பவுடர் – 1 1/2 கப்
நெய் – 4 டேபிள் ஸ்பூன்
பாதாம் பால் தயாரிக்கும் பவுடர் – 2 டேபிள் ஸ்பூன்
(அல்லது பாதாம், குங்குமப்பூ, ஏலக்காய், சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் பொடி செய்யவும்)
ஜாதிக்காய் பொடி – சிறிது
வறுத்த பாதாம், முந்திரி, திராட்சை அலங்கரிக்க

rava pudding recipe in tamil cooking tips
செய்முறை:

இதை மைக்ரோவேவ் அவனில் செய்தால் நன்றாக இருக்கும். (குக்கரிலும் செய்யலாம்) பாலை கனமான வாணலியில் வைத்து மூன்றில் ஒரு பங்கு வரை சுண்டச் காய்ச்சவும். முந்திரியை சூடான வாணலி அல்லது அவனில் வைத்து சிவக்காமல் க்ரிஸ்ப்பாக ஆக்கி மிக்சியில் நைசாக பொடிக்கவும். 1 டேபிள் ஸ்பூன் நெய்யை ஒரு தவாவில் சூடாக்கி, அதில் ரவையைப் போட்டு, நல்ல மணம் வரும் வரை வறுக்கவும். சுண்டக் காய்ச்சிய பாலைச் சேர்த்து கெட்டியாக வேக வைக்கவும். அகல பாத்திரத்தில் மீதமிருக்கும் நெய்யை கரண்டியால் அடித்துக் கலந்து நுரைவரும் வரை செய்து, அத்துடன் சர்க்கரையை சிறிது சிறிதாகச் சேர்த்து, நன்கு கலந்து, தயிர் போல் மிருதுவாக வரும்படி தயாரிக்கவும். இத்துடன் ரவை கூழ், முந்திரிப்பொடி, பாதாம்பால், மசாலாபால், ஜாதிக்காய் பொடி சேர்க்கவும். அவனில் வைப்பதனால் 200 Cக்கு (10 நிமிடம் ப்ரீ ஹீட் செய்யவும்) மைக்ரோவேவ் அவன் என்றால் 100 சதவீதம் ஹை சூட்டில் 7 அல்லது 8 நிமிடம் வைக்கவும்.) 10 நிமிடம் ஆறவைத்து பின் ப்ரிட்ஜில் வைக்கலாம்) பானில் தட்டு போட்டு அரை அங்குலம் உயரம் வரை நீர் விட்டு அதன் மேல் புட்டிங் மின்ஸ் போட்டிருக்கும். பாத்திரம் எல்லா பக்கமும் (நெய் தடவினால்) வைத்து வெயிட், கேஸ்கெட் போடாமல் வைத்து 20 நிமிடம் குறைந்த நிதானத்தீயில் வைத்து, வாசனை வந்ததும் அணைத்து விட்டு, 10 நிமிடம் கழித்து குக்கரைத் திறந்து எடுத்து, ஆறியதும் ப்ரிட்ஜில் வைக்கவும். (வெந்து எடுத்ததும் அதன் மேல் பாதாம், முந்திரி தூவி அலங்கரிக்கலாம்.)

Loading...
Categories: Saiva samyal, Tamil Cooking Tips, இனிப்பு வகைகள், சிற்றுண்டி, சைவம்

Leave a Reply


Sponsors