சளி பிரச்சினையை தீர்க்கும் தூதுவளை|sali neenga thuthuvalai Maruthuvam

அலர்ஜியால் திடீரென சளி பிடிக்கும். நாள்பட்ட சளியானது காசநோயாக மாறும். காய்ச்சலை உண்டாக்கும். அதிக சளியால் மூச்சு திணறல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும். தூதுவளையை பயன்படுத்தி சளி பிரச்னையை தீர்க்கும் மருந்து தயாரிக்கலாம். 10 தூதுவளை இலைகளை எடுக்கவும். இதனுடன், சிறிது முசுமுசுக்கை இலை, பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர சளி, இருமல் இல்லாமல் போகும்.
சளி பிரச்சனைக்கு தூதுவளை மருந்தாகிறது. இது, உஷ்ணத்தை கொடுக்க கூடியது. உடலுக்கு பலத்தை தருகிறது. முசுமுசுக்கை சளியை போக்குகிறது. ஆயுளை அதிகரிக்கும் தன்மை கொண்டது. தூதுவளை, முசுமுசுக்கை பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். வெள்ளெருக்கம் பூவை பயன்படுத்தி ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ளும் மருந்து தயாரிக்கலாம்.

thoothuvalai tips,sali neenga thuthuvalai  Maruthuvam
வெள்ளெருக்கம் பூவின் இதழ்களை நீர்விடாமல் பசையாக அரைத்து எடுக்கவும். இதனுடன் மிளகுப்பொடி சேர்க்கவும். 4 பங்கு பூவுக்கு ஒரு பங்கு மிளகு என்ற அளவில் எடுக்கவும். இதை நன்றாக கலந்து சுண்டைக்காய் அளவில் உருண்டைகளாக பிடிக்கவும். இது காய்ந்தவுடன் மிளகு அளவுக்கு கிடைக்கும். அன்றாடம் இருவேளை மிளகு அளவுக்கு சாப்பிடும்போது ஆஸ்மா சரியாகும். ஆஸ்துமாவுக்கு மிகவும் பாதுகாப்பான மருந்தாக வெள்ளெருக்கம் பூ விளங்குகிறது. ஒரு வெள்ளெருக்கம் பூவுடன் 5 மிளகு சேர்த்து மென்று சாப்பிட்டால் ஆஸ்மா பிரச்சனை தீரும்.
கடுகை பயன்படுத்தி வறட்டு இருமலுக்கான தேனீர் தயாரிக்கலாம். கால் ஸ்பூன் கடுகு எடுத்து லேசாக வறுக்கவும். இதை இடித்து எடுக்கவும். இந்த பொடியில் ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். வடிகட்டி தேன் சேர்த்து குடிப்பதால் சளி, காய்ச்சல், இருமல், உடல் வலி, கண்களில் நீர் வழிதல் போன்ற பிரச்சனைகள் இல்லாமல் போகும். இந்த தேனீரை 50 முதல் 100 மில்லி வரை குடிக்கலாம்.
இருமலுக்கு கடுகு உன்னதமான மருந்தாகிறது. பல்வேறு நன்மைகளை கொண்ட கடுகு காரம் மிக்கது, உடலுக்கு உஷ்ணத்தை தரக்கூடியது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. காய்ச்சலை தணிப்பதுடன் வலியை குறைக்கும். வீக்கத்தை கரைக்கிறது. எளிதில் கிடைக்கூடிய விளக்கெண்ணெய்யை பயன்படுத்தி வயிற்று வலியை போக்கும் முறையை பார்க்கலாம். வீட்டில் இருக்கும் சமயத்தில் திடீரென வயிற்று வலி ஏற்பட்டால், சுமார் 6 சொட்டு அளவுக்கு விளக்கெண்ணெய் எடுத்து, தொப்புளை சுற்றி போடவும். இவ்வாறு செய்தால் சிறிது நேரத்தில் வயிற்று வலி இல்லாமல் போகும்.

Loading...
Categories: Maruthuva Kurippugal in Tamil, மூலிகை மருத்துவம்

Leave a Reply


Sponsors