பசளிக் கீரை சாப்பிட்டு வந்தால் தொந்தி குறையுமாம்|thonthi kuraiya tips in tamil

தொப்பை பெருத்து இருப்பவர்கள் பசலைக் கீரையை உண்டால் தொப்பை குறையும்.

ரத்தம் குறைவாக, ரத்த சோகை இருப்பவர்கள் பசரைக் கீரையை உண்டால் ரத்தம் பெருகும் என்பது இப்பழமொழியின் பொருள். பசலைக் கீரையில் வைட்டமின் ஏ சத்து மிகுதியாக உள்ளது. குளிர்ச்சியையும் கொடுக்கக்கூடியது.

பெண்களுக்கு வெள்ளைப்படுதல் அதிகமாக இருந்தால் இந்தக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குணம் தெரியும் என்பர். வயிற்றில் அதிகமாகச் சதை இருந்தாலும் (தொப்பை) குறைக்கக்கூடிய சத்து இக்கீரைக்கு உண்டு.

 

 

pasalai keerai benefits in tamil

பசரைக் கீரையிலும் ஏ, பி வைட்டமின் சத்து அதிகம் உண்டு. இந்தக் கீரை தரையோடு தரையாகப் படரும். தண்டு மிக மிக மெல்லிய மென்மையாக இருக்கும். இது மிக மிகச் சிறியதாக, எள்ளின் வடிவத்தில் இருக்கும். கிராமத்தில் இக்கீரையைப் பேன் கீரை என்பர். பேன் போன்ற வடிவத்தில் இருப்பதால் இப்படிச் சொல்வது வழக்கமாக உள்ளது.

மற்ற கீரைகளில் இல்லாத ஒரு சத்து இக்கீரையில் உள்ளது. ரத்தம் குறைந்தவர்கள், 10 நாள்கள் இக்கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தம் நன்கு விருத்தியாகும் என்பர். இக்கீரையை தண்டோடு சேர்த்தே சமைக்கலாம்.

தரையோடு படர்வதால், வாங்கி வரும் கீரையை நன்கு தண்ணீரில் மண் போக கழுவினால் போதும். பசலை, பசரை இந்த இரண்டு கீரைகளையுமே, புளி சேர்த்தும் அல்லது பருப்பில் போட்டும் வேகவைத்து, வெங்காயம், தக்காளி சேர்த்து சமைத்தால் சுவை மிகுதியாகவும் இருக்கும். உடல் நலத்திற்கும் ஏற்றது.

எந்த விதத்திலேயும் கீரைகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. ஊட்டச் சத்து நிறைந்ததும் ஆகும்

Loading...
Categories: Pregnancy Tips Tamil

Leave a Reply


Sponsors