வயிற்று எரிச்சலை போக்குவதற்கான வழிகள்|Vayiru Eriyudha neenga tips

வயிற்று எரிச்சலானது ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அதில் வயிற்றுப் புண், அதிகப்படியான அமில சுரப்பினால் ஏற்படும் அல்சர், அளவுக்கு அதிகமான ஆல்கஹால் பருகுதல், வயிற்றில் நோய்த்தொற்று, மன அழுத்தம் என பலவற்றினால் வயிற்றில் எரிச்சல் ஏற்படும்.

இப்படி எரிச்சலானது அதிகரித்தால், எந்த ஒரு செயலையும் நிம்மதியாக செய்ய முடியாது. குறிப்பாக இந்த எரிச்சலால் இரவில் தூங்க கூட முடியாது. சில சமயங்களில் நடக்கவே முடியாது. அந்த அளவில் எரிச்சலும், வலியும் பாடாய் படுத்திவிடும். ஆகவே பலர் இந்த எரிச்சலை தணிப்பதற்கு கடைகளில் விற்கப்படும் மாத்திரைகளை வாங்கி சாப்பிடுகின்றனர்.

 

 

Vayiru Eriyudha neenga tips

ஆனால் இப்படி கண்ட கண்ட மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டால், அவை வயிற்றில் ஏற்படும் எரிச்சலை தற்காலிகமாகத் தான் சரிசெய்யுமே தவிர, நிரந்தரமாக சரிசெய்வதில்லை. எனவே எப்போதும் மாத்திரைகள் போடுவதை தவிர்த்து, முதலில் இயற்கை பொருட்களைக் கொண்டு எப்படி சரிசெய்வது என்று யோசிக்க வேண்டும். ஒருவேளை அப்படி இயற்கை வழிகளின் மூலம் சரிசெய்ய முடியாவிட்டால், உடனே மருத்துவரை அணுக வேண்டும். இங்கு வயிற்றில் ஏற்படும் எரிச்சலைத் தடுக்கும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றை முயற்சி செய்து பாருங்கள்.


வெள்ளை சாதம்

வயிற்றில் ஏற்படும் எரிச்சலை தணிப்பதற்கு வெள்ளை சாதத்தை சாப்பிட்டு வாருங்கள். இதனால் அவை எளிதில் செரிமானமடைவதோடு, சாதத்தை செரிப்பதற்கு இன்னும் அதிகப்படியான அமிலத்தை சுரக்க தேவையில்லை.


இஞ்சி

இஞ்சி டீ போட்டு குடித்து வந்தால், வயிற்றில் உள்ள புண் குணமாவதோடு, எரிச்சலும் குறையும்.


புதினா

அதிகப்படியான அமில சுரப்பினால் எரிச்சல் ஏற்படுவதாக இருந்தால், புதினாவை டீ போட்டு அல்லது அப்படியே தினமும் சாப்பிட்டு வர விரைவில் குணமாகும்.


தயிர் அல்லது மோர்

வயிற்று எரிச்சலை தணிப்பதில் தயிர் அல்லது மோரை விட சிறந்த பொருள் எதுவும் இல்லை. எனவே தினமும் தயிர் அல்லது மோரை அதிகம் பருகி வாருங்கள்.


தேன்

தேன் சாப்பிட்டு வந்தால், அசிடிட்டி பிரச்சனை குணமாகும். அதற்கு தேனை தனியாகவோ அல்லது பட்டையுடனோ சேர்த்து சாப்பிடலாம்.


வாழைப்பழம்

வாழைப்பழம் சாப்பிட்டால், வயிற்று எரிச்சல், நெஞ்செரிச்சல் போன்ற அனைத்து பிரச்சனைகளும் சரியாகும்.


இளநீர்

இருப்பதிலேயே வயிற்று எரிச்சலைத் தடுக்கும் பொருட்களிலேயே மிகச்சிறந்தது என்றால் அது இளநீர் தான். அதிலும் இதனை தினமும் காலையில் வெறும் வயிற்றில் ழுடித்து வர, உடனே வயிற்று பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.


பால்

கால்சியம் அதிகம் நிறைந்த பாலை அதிகம் குடித்து வந்தால், அது வயிற்றில் சுரக்கப்படும் அதிகப்படியான அமிலத்தைத் தடுக்கும். அதிலும் உணவு உண்ட பின்னர் ஒரு டம்ளர் பால் குடிப்பது மிகவும் நல்லது.


வென்னிலா

ஐஸ்க்ரீம் இந்த நிவாரணியைப் பார்த்ததும், அனைவருக்கும் ஒரே குஷியாக இருக்கும். ஆம், உண்மையிலேயே வென்னிலா ஐஸ்க்ரீம் சாப்பிட்டு வந்தால், அது அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுவிக்கும்.

தர்பூசணி

தர்பூசணியை வயிற்று எரிச்சலின் போது ஜூஸ் போட்டு குடித்தால், வயிற்று எரிச்சலானது உடனே தணியும்.

Loading...
Categories: Maruthuva Kurippugal in Tamil

Leave a Reply


Sponsors