கருத்தரிக்க உடல் எடை தடையாக இருக்கிறதா

உடல்பருமனாக இருப்பது கருத்தரிக்க கட்டாயம் ஒரு தடையாக இருக்கலாம். இதனால் ஆண்களுக்கு விந்தணு உற்பத்தி திறன் குறைபாடு, பெண்களுக்கு கருத்தரிக்க முடியாமல் போவது ஏற்பட நிறைய வாய்ப்புகள் இருக்கலாம். எனவே, உடல் பருமனாக இருக்கும் பெண்கள் என்னென்ன பின்பற்ற வேண்டும் என்பதை பற்றி இனிப் பார்க்கலாம்….
குண்டாக இருப்பவர்கள் நிச்சயம் இரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும். ஏனெனில் தைராய்டு இருந்தாலும், உடல் எடை கூடும். அப்போது அந்த எடையை குறைக்க முடியாமல், கர்ப்பமாவதில் பிரச்சனை ஏற்படும். ஒரு வேளை தைராய்டு இல்லையெனில், கர்ப்பமாவதற்கு உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் போது எளிதில் உடல் எடையானது குறையும்.
கருத்தரிக்க உடல் எடை தடையாக இருக்கிறதா
ஆகவே உடல் எடையைக் குறைக்க உணவுகளை தவிர்க்காமல், அதற்கு பதிலாக உடற்பயிற்சி மற்றும் குறைந்த கொழுப்புள்ள உணவுகளை உணவில் சேர்த்துக் கொண்டு டயட் மேற்கொண்டால், கர்ப்பமாவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.
அதிக குண்டாக இருந்தால், மாதவிடாய் பிரச்சனை அதிகம் இருக்கும். ஆகவே உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் போது, மாதவிடாய் சுழற்சியையும் கவனிக்க வேண்டும். அப்போது மாதவிடாய் சுழற்சி சாதாரணமாக தொடர்ந்து சரியாக நடைபெற்றால், பின் கருத்தரிக்க முயற்சிக்கும் போது எளிதில் கர்ப்பமாகலாம்.
பெண்கள் குண்டாக இருக்கும் போது கர்ப்பமாவதில் பிரச்சனை ஏற்படுகிறதென்றால், அவர்களால் உறவின் போது சரியான ஒரு நிலையில் இருக்க முடியாது. ஆகவே ஸ்பெர்மானது உள்ளே செல்வதில் சிறிது கஷ்டமாக இருக்கும். ஆகவே சரியான நிலையில் உறவு கொண்டால், ஸ்பெர்ம் எளிதில் உள்ளே சென்று, பெண் முட்டையுடன் கலந்து, கரு உருவாவதற்கு ஈஸியாக இருக்கும்.
உடல் எடையினால் கர்ப்பமாவதில் பிரச்சனை இருக்கும் போது, அதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் உணவுகளை சாப்பிட்டாலும் வாய்ப்புகள் அதிகரிக்கும். அதிலும் ஃபோலிக் ஆசிட் நிறைந்துள்ள உணவுகளை சாப்பிட்டால், விரைவில் கர்ப்பமாக முடியும்.
அதாவது சோயா பொருட்கள், முட்டை மஞ்சள் கரு, உருளைக்கிழங்கு, கோதுமை, முட்டைகோஸ், பீட்ரூட், வாழைப்பழம், ப்ராக்கோலி மற்றும் முளைகட்டிய பயிர்கள் போன்ற அனைத்திலுமே ஃபோலிக் ஆசிட் அதிகம் உள்ளது.
அதிக எடையுடன், ஹார்மோனில் ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும், அவ்வளவு எளிதில் கர்ப்பமாக முடியாது. ஏனெனில் அவை சரியான அளவில் இல்லையெனில், கருப்பையிலிருந்து கருமுட்டையை வெளியே தள்ள முடியாது. எனவே தான் பிரச்சனை ஏற்படுகிறது. ஆகவே PCOS என்ற பரிசோதனையை மேற்கொண்டு, ஹார்மோனின் அளவை சரிசமமாக கொண்டு வந்த பின்னர் முயற்சித்தால், விரைவில் கருத்தரிக்க முடியும்.
Loading...
Categories: Pregnancy Tips Tamil

Leave a Reply


Sponsors