தினமும் வாயுத்தொல்லையால் அவதியா? இந்த எளிய பணிகளை பின்பற்றுங்கள்!

எப்படி வரும், எங்கு வரும், எப்போது வரும் என்று தெரியாது, ஆனால் நாம் முக்கியமாக எங்காவது இருக்கும் போது தான் அடக்க முடியாத அளவு வரும் இந்த வாயுத்தொல்லை. மிகவும் தர்மசங்கடமான சூழலை ஏற்படுத்திவிடும். சில சமயம் நாள்கணக்கில் உங்களை கேலி, கிண்டல் செய்யவும் இது கருவியாக இருந்துவிடுகிறது.

இதிலிருந்து விடுப்பட வேண்டும் என்று நினைப்பவராக நீங்கள் இருந்தால், இந்த எளிய டிப்ஸ்களை படியுங்கள்….

உண்ணும் முறை
உணவை உண்ணும் போது அவசரமாக சாப்பிடாமல், மெதுவாக நன்கு மென்று சாப்பிட வேண்டும். இல்லையெனில் உணவுப் பொருட்களை அவசரமாக சாப்பிடும் போது, உணவுப் பொருட்கள் இரைப்பையில் காற்றையும் உள்ளே தள்ளிக் கொண்டு சென்றுவிடும். பின் வாயுத் தொல்லை ஏற்படும். ஆகவே மெதுவாக சாப்பிட்டால், உமிழ்நீர் சுரப்பிகள் உணவுப் பொருட்களை கரைப்பதோடு, மென்மையாக்கி, எளிதில் செரிமானமடைய வைக்கிறது. மேலும் உடலில் வாயுத் தொல்லையும் ஏற்படாமல் இருக்கும்.
 stomach gastric problem
சோடா மற்றும் ஜூஸ்
நாம் சோடா சாப்பிட்டால், வாயுத் தொல்லை நீங்கி, வயிற்று வலி சரியாகும் என்று நினைக்கின்றோம். ஆனால் உண்மையில் கார்போனேட்டட் பானங்கள் அனைத்தும் வாயுத் தொல்லை ஏற்படும். ஏனெனில் அதிலிருந்து வரும் சிறு சிறு முட்டைகள் மற்றும் ஜூஸில் இருக்கும் சர்க்கரை வாயுப் பிரச்சனையை உண்டாக்கும். அதனால் தான் இவற்றை சாப்பிட்டப்பின் வயிறு உப்பியது போல் இருக்கிறது.
சூயிங் கம்
தேவையில்லாத காற்று உடலில் புகுவதால் தான் வாயுத் தொல்லையோடு, செரிமானப் பிரச்சனையும் ஏற்படுகிறது. அதிலும் சூயிங் கம் சாப்பிடும் போது, தேவையில்லாத காற்று வாயின் வழியாக உடலில் நுழைந்து, வாயுப் பிரச்சனையை உண்டாக்குகிறது. எனவே இவற்றை தவிர்ப்பது நல்லது.
நடத்தல்
உணவு உண்டப் பின் ஒரே இடத்தில் உட்காராமல், சிறிது தூரம் நடக்க வேண்டும். இதனால் செரிமான மண்டலம் நன்கு இயங்குவதோடு, இரைப்பையில் இருக்கும் கடினமான உணவுப் பொருட்களும் உடைந்து செரிமானமாகிவிடும். மேலும் உடல் எடையும் குறையும். செரிமான மணடலம் நன்கு இயங்கினால், வாயுத் தொல்லை நீங்கும்.
புகைப்பிடித்தல்
புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு என்பது அனைவருக்கும் தெரியும். ஏனெனில் அதில் உள்ள நிகோட்டின் என்னும் பொருள் பல பக்கவிளைவுகளை உண்டாக்கும். அதிலும் இந்த சிகரெட் உடலில் வறட்சியை ஏற்படுத்துவதோடு, வாயுத் தொல்லையையும் உண்டாக்கும். ஆகவே உடலில் பிரச்சனைகள் வராமலிருக்க புகைப்பிடிப்பதை நிறுத்துவது நல்லது.
கார உணவுகள்
வயிற்றில் ஏற்படும் உப்புசம், வாயுத் தொல்லை போன்றவற்றை சரிசெய்ய நிறைய கார உணவுப் பொருட்கள் இருக்கின்றன. அதிலும் கிராம்பு, சோம்பு, ஏலக்காய் விதைகள் மற்றும் பல பொருட்கள், இந்த பிரச்சனைக்கு சிறந்த தீர்வை அளிக்கும். ஆகவே இவற்றை சூடான நீருடன் சாப்பிட்டால், வயிற்று வலி மற்றும் வாயுத் தொல்லையை தடுக்கலாம்.
தண்ணீர்
ஒரு நாளைக்கு 8-10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் உடலில் உள்ள கழிவுகள் வெளியேறுவதோடு, இரைப்பையிலிருந்து வாயுவும் வெளியேறிவிடும்.
Loading...
Categories: Maruthuva Kurippugal in Tamil

Leave a Reply


Sponsors