பனீர்-பனானா ரோல்ஸ்,rolls recipe in tamil

தேவையானவை :
பனீர் – 100கிராம்
வாழைப்பழம் – 3
தேங்காய் துருவல் – 1/2 கப்
சர்க்கரை – 75 கிராம்
பாதாம்,முந்திரி,பேரீச்சை – சிறிது நறுக்கியது
மைதா – 200 கிராம்
உப்பு – சிறிது
முட்டை – 1
பொறிக்க – எண்ணைய்
நெய் -சிறிது
ஏலக்காய்த்தூள் – சிறிது
தயாரிக்கும் முறை
பனீர்-பனானா ரோல்ஸ்
செய்முறை –
முதலில் பாத்திரத்தில் மைதா,உப்பு,முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து நன்கு நீருடன் கலந்து கட்டியில்லாமல் தோசை மாவு போல் கலந்து வைக்கவும்.
பின்னர் வாணலியில் நெய் சேர்த்து தேங்காயை வதக்கி,பின் பனீர் மற்றும் பாதாம்,பேரீச்சம்பழம் முந்திரி,வாழைப்பழம்,சர்க்கரை,ஏலம்,முட்டையின் மஞ்சள் கரு என எல்லாம் சேர்த்து கிளறவும்.கெட்டியானவுடன் இறக்கி வைக்கவும்.
ஒரு பானில் அல்லது தவாவில் சிறிது நெய் அல்லது
எண்ணைய் தடவி மைதா கரைசலை தோசை போல் ஊற்றி நிறம் மாறும் முன் எடுத்து அதில் பனீர்,வாழைப்பழ பூரணத்தை வைத்து நான்காக மடித்து எண்ணையில் பொறித்து எடுக்கவும்.பனானா ரோல் சாப்பிட சுவையாக இருக்கும்.
Loading...
Categories: Tamil Cooking Tips, சிற்றுண்டி

Leave a Reply


Sponsors