Loading...

 

தேவையான பொருட்கள்:

  • பெரிய கத்திரிக்காய் – 1
  • பாஸ்மதி – 2 கப்
  • வெங்காயம் – 1
  • தக்காளி – 1
  • பச்சை மிளகாய் – 6
  • பால்(அ)தேங்காய்ப்பால் – 3 கப்
  • இஞ்சி பூண்டு விழுது – 1/2 டேபிள் ஸ்பூன்
  • மஞ்சள்தூள் – 1/4 டீ ஸ்பூன்
  • நெய் – 1 டேபிள் ஸ்பூன்
  • எலுமிச்சை சாறு – 1 டீ ஸ்பூன்
  • சோம்பு – 1 டீ ஸ்பூன்
  • புதினா, கொத்தமல்லி – 1 கைப்பிடி
  • உப்பு-எண்ணெய் – தேவைக்கு

வறுத்து பொடிக்க:

  • ஏலக்காய் – 3
  • பட்டை – சிறு துண்டு
  • கிராம்பு – 4
  • பிரியாணி இலை – 2

கத்திரிக்காய் பிரியாணி,Brinjal Biryani in tamil,kathirikai biryani

செய்முறை:

* வெங்காயம்-தக்காளி நறுக்கவும். பச்சை மிளகாயை கீறவும். கத்திரிக்காயை நீளவாக்கில் அரியவும்.

* அரிசியை கழுவி 10 நிமிடம் ஊறவைக்கவும். பின் நீரில்லாமல் வடித்து 1/2 டேபிள் ஸ்பூன் நெய்யில் லேசாக வறுத்து தனியாக வைக்கவும்.

* குக்கரில் எண்ணெய் 1/2 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு சோம்பு போட்டு தாளித்து வெங்காயம்-தக்காளி-பச்சை மிளகாய்-இஞ்சி பூண்டு விழுது-வறுத்து பொடித்த பொடி-கத்திரிக்காய் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

* பிறகு உப்பு-மஞ்சள்தூள்-அரிசி-எலுமிச்சை சாறு-புதினா கொத்தமல்லி சேர்த்து 3 விசில் வரை வேகவைத்து எடுக்கவும்.

* குறிப்பு: இதற்கு உருளை வறுவல் பெஸ்ட் காம்பினேஷன்.

Loading...

Leave a Reply


Recent Recipes

Sponsors