காய்கறி இடியாப்பம்,idiyappam,idiyappam samayal,idiyappam recipe in tamil

தேவையான பொருட்கள்
இடியப்பம் – 11/2கப்
மாவில் செய்தது கேரட்-1 பீன்ஸ்-5
உருளைக்கிழங்கு -பாதி
பச்சைப்பட்டாணி – ஒரு கைப்பிடி
வெங்காயம் -1
பச்சைமிளகாய்-1 கறிவேப்பிலை,
கொத்துமல்லி இலை
மஞ்சள்தூள்-1/4டீஸ்பூன்
மிளகாய்த்தூள் -1/2 டீஸ்பூன்
சக்தி கறிமசாலா தூள் -1டீஸ்பூன்
கடுகு -1/2டீஸ்பூன்
க.பருப்பு,உ.பருப்பு -தலா 1 டீஸ்பூன்
சோம்பு -1 டீஸ்பூன் உப்பு எண்ணெய்
செய்முறை இடியப்பத்தை உதிர்த்து வைக்கவும். கேரட்-பீன்ஸ்-உருளைக்கிழங்கை கழுவிப் பொடியாக நறுக்கி காய்கள் மூழ்குமளவு தண்ணீர் விட்டு 2 நிமிடங்கள் மைக்ரோவேவ் செய்யவும்.
idiyappam,காய்கறி இடியாப்பம்
சிறிது நேரம் கழித்து காய்களை எடுத்து, அவற்றுடன் ஃப்ரோஸன் பட்டாணி, காய்களுக்குத் தேவையான உப்பு சேர்த்து 30 நொடிகள் மைக்ரோவேவ் செய்து வைக்கவும்.
வெங்காயம்,பச்சைமிளகாயை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் காயவிட்டு கடுகு-சோம்பு பொரியவிடவும். க.பருப்பு-உ.பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பிறகு வெங்காயம்-ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் வேகவைத்த காய்களைத் தண்ணீர் வடித்துவிட்டு சேர்த்து,மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தேவையான உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
சக்தி கறிமசாலா சேர்த்து பிரட்டிவிடவும். மசாலா வாசம் அடங்கியதும் உதிர்த்த இடியப்பம் சேர்த்து கிளறவும். காய்கறி மசாலாவுடன் இடியப்பம் நன்கு கலந்து சூடானாதும் மல்லி இலை தூவி அடுப்பிலிருந்து இறக்கவும். சுவையான வெஜிடபிள் இடியப்பம் தயார்.  
பின்குறிப்பு காய்களுடன் உப்பு சேர்த்து வேகவைக்கிறோம்,இடியப்பத்திலும் உப்பு சேர்த்திருக்கலாம், சேராமலும் இருக்கலாம், அதற்கேற்ப உப்பு கவனமாக சேர்க்கவும்.
Loading...
Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors